2 கிட்னியும் செயலிழந்துவிட்டது! ICU-வில் பிரபல காமெடி நடிகர்! சிகிச்சைக்கு உதவுங்கள் கதறிய நடிகர் பெஞ்சமின்!

Published : Sep 21, 2022, 11:59 AM ISTUpdated : Sep 21, 2022, 12:16 PM IST
2 கிட்னியும் செயலிழந்துவிட்டது! ICU-வில் பிரபல காமெடி நடிகர்! சிகிச்சைக்கு உதவுங்கள் கதறிய நடிகர் பெஞ்சமின்!

சுருக்கம்

பிரபல காமெடி நடிகர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது மேல் சிகிச்சைக்கு உதவும்படி, நடிகர் பெஞ்சமின் பேசி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.  

வடிவேலு, விவேக் போன்ற காமெடி ஜாம்பவான்களுடன் நடித்துள்ளவர் போண்டா மணி. இவரது தனித்துவமான இலங்கை தமிழ் பேச்சு வழக்கும், உடல் மொழியும் தான் இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது. இலங்கையை சேர்ந்த போண்டா மணி, தன்னுடைய இளமை பருவத்தில், சில வருடங்கள் சிங்கப்பூரில் பணிபுரிந்தார். அப்போது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டுக்குச் சென்ற இயக்குனர் கே.பாக்யராஜுடன் இவருக்கு நட்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பாக்யராஜ் இயக்கிய பவுன்னு பவுனுதான்  திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மேலும் செய்திகள்: 'ஆஸ்கர் விருதுக்கு' பரிசீலிக்கப்பட்டு 13 இந்திய படங்கள் எவை? தமிழில் எந்த படம் பார்க்கப்பட்டது தெரியுமா...?
 

200க்கும் மேற்பட்ட படங்களில் முன்னனி காமெடி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ள இவர், இலங்கையில் இருந்து வந்து தமிழகத்திலேயே பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மேலும், நடிப்பை தாண்டி சிறிய அளவில் கடை ஒன்றையும் சென்னையில் நடத்தி வருகிறார். நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்த இவர் கடந்த சில வருடங்களாகவே அடுத்தடுத்து உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருவதால் அவரது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்:ரோஜா சீரியல் நடிகை அக்ஷயாவுக்கு நடந்து முடிந்த வளைகாப்பு! பச்சை நிற பட்டு புடவையில் கணவருடன் கியூட் ரொமான்ஸ்!
 

58 வயதாகும் போண்டா மணிக்கு, சமீபத்தில் திடீரென இதய கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து, மீண்டும் இவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு உதவுங்கள் என கண்ணீர் விட்டு கதறியுள்ளார் பிரபல காமெடி நடிகர் பெஞ்சமின். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியுள்ளதாவது, "நடிகர் போண்டா மணி அவர்களுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதாகவும், தற்போது அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய மேல் சிகிச்சைக்கு உதவுங்கள். உங்களுக்கு தெரிந்த அரசியல் தலைவர்களுக்கோ... அல்லது நண்பர்களுக்கோ பகிர்ந்து உதவி செய்யுங்கள். அனாதையாக இலங்கையில் இருந்து வந்து, இங்கேயே திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் அவர், மீண்டும் அனாதையாக பிள்ளைகளை விட்டு விட்டு செல்ல கூடாது என கண்ணீருடன் பேசியுள்ளார்.

இவருடைய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷை வீட்டை விட்டு துரத்த விஜயா போடும் புது பிளான்... ரோகிணிக்கு சிக்கல் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்