நடிகர் கார்த்தியின் 'கைதி 2 ' படம் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட சூப்பர் தகவல்!

Published : May 25, 2021, 06:01 PM IST
நடிகர் கார்த்தியின் 'கைதி 2 ' படம் குறித்து தயாரிப்பாளர் வெளியிட்ட சூப்பர் தகவல்!

சுருக்கம்

'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கைதி'.   தந்தை - மகள் செண்டிமென்ட்டுடன், ஒரே இரவில் நடக்கும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அசத்தலான வரவேற்பை பெற்றது.   

'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கைதி'.   தந்தை - மகள் செண்டிமென்ட்டுடன், ஒரே இரவில் நடக்கும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அசத்தலான வரவேற்பை பெற்றது. 

விஜய்யின் 'பிகில்' என்ற பிரம்மாண்ட படத்துக்கு போட்டியாக வந்தததால் 'கைதி' படத்திற்கு, ஆரம்பத்தில் 250 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தன. இதனால், மிக குறைந்த தியேட்டர்களிலேயே வெளியான 'கைதி' படம், ரசிகர்களிடம் கிடைத்த அமோக வரவேற்பால், பின் 350 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

பாடல், ஹீரோயின் இல்லாமல் முழுவதும் கதையை மட்டுமே நம்பி களமிறங்கிய 'கைதி' திரைப்படம் சத்தமே இல்லாமல் பல சாதனை படைத்தது. உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி 'கைதி' படம், பாக்ஸ் ஆஃபிசில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை நடிகர் கார்த்தியின் எந்த படமும் செய்யாத சாதனையை கைதி படம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலக அளவில் முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூல் செய்த கார்த்தியின் திரைப்படம் என்ற பெருமையை கைதி பெற்றது. வெறும் 25 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட கைதி திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பால் மாபெரும் வெற்றி அடைந்தது.  இதன்மூலம், நல்ல கதையுடன் தரமான படமாக இருந்தால், எப்படிப்பட்ட சூப்பர் ஹீரோவின் பிரம்மாண்ட படத்திற்கு போட்டியாக வந்தாலும் ஜெயித்து விடலாம் என்பதை தமிழ் திரையுலகிற்கு 'கைதி' படத்தின் மூலம் உணர்த்தினார் லோகேஷ் கனகராஜ்.  

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என, ரசிகர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் தொடர்ந்து வேண்டுகோள் வைத்து வரும் நிலையில், அடுத்தடுத்து, லோகேஷ் விஜய்யின் மாஸ்டர், மற்றும் தற்போது நடிகர் கமல் நடித்து வரும் 'விக்ரம்' ஆகிய படங்களில் பிசியாகி உள்ளார். அதே போல் கார்த்தியும் இயக்குனர் மணிரத்னம் இயக்கும், 'பொன்னியின் செல்வன்' படத்தில் பிசியாகி உள்ளார். இன்னுமும் விரைவில் கைது 2 ஆம் பாகும் குறித்த தகவல் வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து, கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு... நீண்ட நாட்களுக்கு பின்னர் 'கைதி 2 ' படம் குறித்து பேசியுள்ளார். அதாவது 'கைதி 2 ' நிச்சயம் உருவாகும் என்றும், இதற்கான பணிகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளது கார்த்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!
பாசத்தை உலுக்கிய துயரங்கள்; பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்த சோக சம்பவங்கள்!