இசையமைப்பாளர் டி.இமான் வீட்டில் நிகழ்ந்த சோகம்... கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

Published : May 25, 2021, 12:45 PM ISTUpdated : May 25, 2021, 12:46 PM IST
இசையமைப்பாளர் டி.இமான் வீட்டில் நிகழ்ந்த சோகம்... கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

சுருக்கம்

பல அறிமுக பாடகர்களுக்கு, வாய்ப்பளித்து பின்னணி பாடகர்களான அவர்களை மாற்றியுள்ளவர் டி.இமான், இவர் வீட்டில் தற்போது ஏற்பட்டுள்ள துக்க சம்பவம், அவரது குடும்பத்தினரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

பல அறிமுக பாடகர்களுக்கு, வாய்ப்பளித்து பின்னணி பாடகர்களான அவர்களை மாற்றியுள்ளவர் டி.இமான், இவர் வீட்டில் தற்போது ஏற்பட்டுள்ள துக்க சம்பவம், அவரது குடும்பத்தினரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளர் டி.இமான் மிகவும் உருக்கமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவியுட்டுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் டி.இமான், பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து அசதி வருகிறார். அந்த வகையில் தல அஜித், நடித்த 'விஸ்வாசம்' படத்தில் இவர் இசையில் வெளியான 'கண்ணான கண்ணே' மற்றும் அந்த படத்தில் வந்த,  அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது மட்டும் இன்றி, பல்வேறு சாதனைகளையும் செய்துள்ளது.  இந்த வெற்றிகளுக்கு கிடைத்த வாய்ப்பாக தற்போது  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தன்னுடைய இனிமையான இசையால் பல ரசிகர்கள் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட இசையமைப்பாளர் டி.இமானின் தாயார் இன்று உயிரிழந்துள்ளார் . இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில் இமான் கூறியுள்ளதாவது... " மே 23 மூன்றாம் தேதி, தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய தன்னுடைய தாயார், மே 25 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். கோமாவில் இருந்த தன்னுடைய தாயாருக்கு மருத்துவமனையில் , ICU-வில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தருணங்களையும் பகிர்ந்துகொண்டு, உணர்வு பூர்வமான வார்த்தைகளை வெளிப்படுத்தி இப்படிக்கு உங்களுடைய ஒரே மகன் இமான் என பதிவிட்டுள்ளார்.

இவரது இந்த பதிவிற்கு, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்  பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்... 
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்
பாக்ஸ் ஆபிஸ் ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 7 மூவீஸ் ஒரு பார்வை