முதல் நாள் நிகழ்ச்சியில் ஜூலியை கடுப்பேற்றி... கதறவிட்ட குட்டீஸ்!

 
Published : Nov 02, 2017, 02:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
முதல் நாள் நிகழ்ச்சியில் ஜூலியை கடுப்பேற்றி... கதறவிட்ட குட்டீஸ்!

சுருக்கம்

julie crying in first day show

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஜல்லிக்கட்டு ஜூலி தற்போது பிக் பாஸ் ஜூலி என்று மாறும் அளவிற்கு பேமஸ் ஆகிவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம்  இவரை முதலில் ஆதரித்த பலரிடமும் கெட்ட பெயர் பெற்று இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். மேலும் எதிர்மறை  விமர்சனங்களைச் சந்தித்தும் சிறிதும் கலங்காமல் மீண்டும் அவர் மனதில் பட்டதை  செய்து வருகிறார்.

தற்போது இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் நடுவராக இருக்கும் 'ஓடி விளையாடு பாப்பா' என்கிற நிகழ்ச்சியில் தொகுப்பாளராகக் களமிறங்கியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் படப்பிடிப்பு  அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளிடம் ஜூலி  ஏதோ பேசியுள்ளார். உடனே குழந்தைகள் ஜூலியிடம் 'உங்கள எங்களுக்கு சுத்தமா பிடிக்காது... ஓவியாவைத் தான் பிடிக்கும்’ என்றும், 'நீங்க அதிகமா பொய் பேசுவீங்கன்னு எங்க அம்மா சொன்னாங்க என்றும் கூறியுள்ளது ஒரு குழந்தை.

இதைக் கேட்டதும் அவமானம் தாங்க முடியாமல் ஜூலி தனியாகச் சென்று அழுதுள்ளார். பின் நிகச்சியாளர்கள் ஜூலியை சமாதானம் செய்து மீண்டும் அவரை அழைத்து வந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வைத்துள்ளனர்.

ஜூலி மனது புண்படும் படி யாரும் பேசக்கூடாது என கண்டிஷன் போட்ட கலா மாஸ்டர் குழந்தைகளை மறந்து விட்டார் போல... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?