
பீஸ்ட் மோடு :
விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். அதோடு சன்பிக்சர்ஸ் தறித்து வரும் இந்த படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஷான் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முதல் சிங்கிள் ப்ரோமோ :
நெல்சனின் முந்தைய படமான டாக்டர் பாடல்கள் ஹிட் அடித்ததை தொடர்ந்து அதே ஸ்டைலை பீஸ்திலும் பின்பற்றப்படுகிறது. அதன்படி நெல்சன், சிவகார்த்திகேயன், அனிரூத் கூட்டணியில் வெளியான அரபிக் குத்து ப்ரோமோ மாஸ் காட்டி இருந்தது.
அரபிக் குத்து :
இந்த படத்திலிருந்து முதல் சிங்குளாக அரபிக் குத்து செம ஹிட் கொடுத்தது. காதலர் தின சிறப்பாக வெளியான இது ரீல்ஸுகளிலும் கலக்கி வருகிறது. அதோடு பட்டி தொட்டியெல்லாம் அரபிக் குத்துதான் பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு ஸ்டெப் போட்டு விட்டனர்.
மேலும் செய்திகளுக்கு...JollyOGymkhana next promo : தெலுங்கு மாஸ்டருடன் மல்லுக்கட்டும் நெல்சன்..‘ஜாலியோ ஜிம்கானா’ நெக்ஸ்ட் ப்ரோமோ ரெடி
விஜய் குரலில் ஜாலியோ ஜிம்கானா :
அரபிக் குத்து பாடலை அடித்து இரண்டாவது சிங்குளாக ஜாலியோ ஜிம்கானா வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த பாடலை விஜய் பாடியுள்ளார். இந்த ப்ரோமோவில் விஜய், நெல்சன், அனிரூத் இடம்பெற்றிருந்தனர். இந்த ப்ரோமோவும் ஹிட் அடித்தது.
இரண்டாவது ப்ரோமோ :
ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கானசெகண்ட் ப்ரோமோ வெளியாயானது. காமெடி நடிகர்களுக்கான இந்த நடன படப்பிடிப்பில் நெல்சனின் நடிப்பு நகைப்பை உண்டாக்கும் வண்ணம் இருந்தது.. அதில் பனிப்பிரதேசத்தில் நடனம் ஆடுவது போன்ற கோரியோகிராஃபி செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...சென்சாருக்கு சென்ற பீஸ்ட்...பின்னர் தான் ரிலீஸ் தேதி அறிவிப்பாம்
பாடலுக்கு என்ன அர்த்தம் :
ஜாலியோ ஜிம்கானா குறித்த பல கேள்விகள் எழுந்தன. பாடலுக்கு வரிகள் எழுதிய கு.கார்த்தி, ஜாலியோ ஜிம்கானாவுக்கான குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது “எந்த மாதிரி பிரச்சனை நடந்தாலும், அது நடந்தது தான். அதை நம்மால் மாற்ற முடியாது. அதனால் அதைப்பற்றி கவலைப்படாமல் விட்டுட்டு போய்கிட்டே இருக்கணும். என்ன நடந்தாலும் ஜாலியா இருக்கணும், என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.