
வலிமை கூட்டணி :
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் போனிகபூரின் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்திருந்த முந்தைய இயக்குனரான எச். வினோத் இந்த வாய்ப்பையும் தட்டி சென்றார். கிட்டத்தட்ட 2 அரை வருடங்களாக உருவாக்கத்தில் இருந்த வலிமை கடந்த 24-ம் தேதி வெளியானது. முதல் மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 100 கோடிகளை குவித்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
அஜித்குமார் 61 :
வலிமையின் ஏகோபித்த வரவேற்பை அடுத்து அஜித் 6`-ம் இந்த கூட்டணியில் தான் என முன்பே அறிவிக்கப்பட்டது. அதோடு இந்த படம் தொடர்பாக தயாரிப்பாளர் போனி கபூரை அஜித் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதோடு அஜித் லுக்கும் வெளியானது. இதன் அடிப்படையில் அஜித் 62 இந்த படத்தில் அஜித்துக்கு வில்லன் கெட்டப் உறுதியானது.
தொடர்புடைய செய்திகளுக்கு... விஜய்க்கு சவால் விட்ட அஜித்... உண்மையை போட்டுடைத்த தேவயானி கணவர்
விக்கியுடன் - அஜித் :
பிரபல இயக்குனரும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவனின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது. அதாவது அஜித்தின் 62வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. விக்னேஷ் இயக்கம் இந்த படத்தில் அனிரூத் இசையமைக்க லைக்கா தயாரிக்கவுள்ளது.
விடிய விடிய கொண்டாட்டம் :
அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்கள் மட்டுமல்லாது விக்னேஷ் சிவனும் எக்ஸைட் ஆகியுள்ளார். இது குறித்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள விக்கி விடிய விடிய வெடி வெடித்து கொண்டாடியுள்ளார். இது குறித்த பதிவையும் விக்னேஷ் சிவன் பகிர்ந்து வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகளுக்கு... Ajith 62 : பாகிஸ்தானிலும் பரவிய அஜித் புகழ் ... புதிய படம் குறித்து பத்திரிக்கையாளரின் அசத்தல் ட்வீட்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.