நீ வருவாய் படம் குறித்து இத்தனை வருடம் கழித்து இயக்குனர் ராஜ்குமார் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் இராஜகுமாரன் :
நீ வருவாய் என படத்தில் துணை இயக்குனராக அறிமுகமான ராஜகுமாரன் விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், சிவராம், திருமதி தமிழ் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் சிறந்த கதையாசிரியருக்கான விருது, சிறந்த குடும்ப திரைப்படத்திற்கான தமிழ்நாடு விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். சமீபகாலமாக படம் இயக்குதலில் இருந்து விளக்கியுள்ளார்.
தேவயானி - இராஜகுமாரன் திருமணம் :
இராஜகுமாரன் பெரும்பாலான படங்களில் தேவையணி தான் நாயகியாக இருப்பர். இப்படி நாயகியாக ஜொலித்த தேவயானியை மனைவியாக ஏற்க எண்ணிய ராஜகுமாரன் கடந்த 2001-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது விவாகம் திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்றது. தேவயானி மற்றும் இராஜகுமாருக்கும் இடையே படபிடிப்பின் போது காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற குழந்தைகள் உள்ளனர்.
ஹிட் கொடுத்த முதல் படம் :
ராஜ்குமார் துணை இயக்குனராக அறிமுகமான நீ வருவாயென படத்தில் பார்த்திபன், அஜித், தேவயானி நடித்திருப்பர். காதலன் மறைவால் வாடி நிற்கும் நாயகிக்கு அவரது கண்கள் தானம் செய்யப்பட்டது குறித்த தகவல் கிடைக்கிறது. அதோடு அந்த நபர் நாயகி இருக்கும் ஊருக்கு பேங்க் மேனேஜராக வருகிறார். பின்னர் அவரது கண்களை பாதுகாக்க நாயகி முயற்சிக்க அதை காதலாக எண்ணும் நாயகனின் கத்தி தான் இது.
மேலும் செய்திகளுக்கு...Vijayakanth Latest Pics: கேப்டன் வீட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொண்டாட்டம்...விஜயகாந்தின் லேட்டஸ்ட் லுக்.!
அஜித்- விஜய் குறித்த ராஜகுமாரின் பேட்டி :
இந்த படம் குறித்து இயக்குனர் ராஜகுமாரன் பேட்டியளித்துள்ளார். முதலில் இந்த படத்தில் லீட் ரோலில் நடிக்க விஜயை கேட்டுள்ளனர். ஆனால் அப்போது விஜய் பிஸியாக இருந்ததால் கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதம் தெரிவிக்க..அஜித்திடம் கேட்டுள்ளனர். ஆனால் அஜித் மறுத்துள்ளார்.
அஜித்தின் காரணம் :
லீட் ரோல் மருதத்திற்கான காரணமாக அஜித் கூறியது. மௌனராகம் படத்தில் மோகனை நாயகி படம் முழுக்க வெறுத்திருப்பார். இதன் காரணமாக தான் மோகனுக்கு வாய்ப்புகள் குறைந்தன. என கூறியுள்ளார். அதோடு கெஸ்ட் ரோலில் வர சம்மதம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..மகன்களுடன் ராக் வித் ராஜாவை ரசித்த தனுஷ்..வைரலாகும் போட்டோ..
இடையில் விஜயை சீண்டிய அஜித் :
அதோடு இதுபோன்ற ரோல்களில் விஜய் நடிப்பாரா. தான் கூறிய காரணத்தை மனதில் கொண்டே அவர் லீட் ரோலில் நடிக்க மறுத்துள்ளார். விஜய் சாருக்கு தைரியம் இருந்தால் பண்ண சொல்லுங்கள் பார்க்கலாம் என கூறியுள்ளார். என்று ராஜகுமாரன் கூறியுள்ளார்.
Refused To Do A Guest Role In Movie pic.twitter.com/3IbjWGwaSC
— chettyrajubhai (@chettyrajubhai)