
நடிகர் பார்த்திபன் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் அவரிடம் பணியாளராக பணியாற்றிய, ஜெயம்கொண்டான் என்பவர் கொலை முயற்சி புகார் கொடுத்துள்ளார்.
பார்த்திபனின் திருவான்மியூர் வீட்டில், ஒரு வருடத்திற்கு முன் அவர் வீட்டில் நகைகள் கொள்ளை போனது. இதனால் பார்த்திபனிடம் வேலை செய்த அனைவரையும் போலீசார் விசாரித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது பார்த்திபன், அவரிடம் வேலை செய்து வந்த ஜெயம்கொண்டானை பணியில் இருந்து நீக்கியதாகவும், இது குறித்து கேட்டதற்கு, பார்த்திபன் தன்னை தாக்கி, மாடியில் இருந்து தள்ளி விட்டதாக ஜெயங்கொண்டான் தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குறித்து, நுங்கம் பக்கம் காவல் துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.