
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு, அரசால் தனி அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் தனி அலுவலர் புதிய அறிவிப்பில், 9 பேருக்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு, பார்வை (1 ) கண்ட அரசாணையின்படி தனி அலுவலர் நியமிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பார்வை (2 ) காணும் பதிவுத்துறை தலைவர் அவர்களின் கடிதத்தில் அரசாணையின்படி, சங்கத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் வகையில் விரைந்து செயல்பட ஏதுவாக தனி அலுவலரின் நடவடிக்கைகளுக்கு உதவிடும் பொருட்டு, தற்காலிக குழு ஒன்றினை அமைத்து அதன் விபரத்தை தெரிவிக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி ,"பாரதிராஜா, T . G .தியாகராஜன், K . ராஜன், சிவசக்தி பாண்டியன், S .V .சேகர், J .S .K . சதீஷ்குமார், S .S .துரைராஜ் R . ராதா கிருஷ்ணன் , உள்ளிட்ட 9 பேருக்கு தற்காலிக குழுவில் புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.