
தமிழ் திரையுலகில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான "ஜெயம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கிய நடிகர் தான் ஜெயம் ரவி. மிகப்பெரிய சினிமா பின்புலம் கொண்ட நடிகர் என்றாலும் கூட, துவக்கத்திலிருந்து பல தடைகளை தாண்டித் தான் ஜெயம் ரவி ஒரு நல்ல நடிகராக உருவெடுத்துள்ளார்.
"பேராண்மை", "ஆதி பகவன்", "நிமிர்ந்து நில்", "தனி ஒருவன்" மற்றும் "பூலோகம்" என்று பல நல்ல திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் புகழ்பெற்ற ஒரு நடிகராக அவர் திகழ்ந்து வருகிறார். கடந்த 21 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் பயணித்து வரும் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வெளியான மணிரத்தினம் அவர்களின் பொன்னியின் செல்வன் திரைப்படம் மக்கள் மத்தியில் இவருக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.
"அருள்மொழி வர்மனாகவே" ஜெயம் ரவி வாழ்ந்தார் என்றாலும் அது மிகையல்ல. இறுதியாக இந்த 2024 ஆம் ஆண்டு துவக்கத்தில் வெளியான "சைரன்" என்கின்ற திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது நல்ல பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக அவர் நடித்து வருகிறார்.
இந்த சூழலில் தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனராக களமிறங்கும் புவனேஷ் அர்ஜுனன் என்பவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள ஜீனி என்கின்ற திரைப்படத்தில் தற்பொழுது ஜெயம் ரவி நடித்து வருகிறார். முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் அவர் இந்த படத்தில் நடிக்கின்றார். தற்பொழுது அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Ramya Pandian : ஜாலியாக ஒரு ஹோலி கொண்டாட்டம்... வைரலாகும் ரம்யா பாண்டியனின் ரம்மியமான போட்டோஸ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.