சென்னையில் உள்ள புகழ்பெற்ற சத்யம் திரையரங்கில் சிஎஸ்கே வீரருடன் வந்து மஞ்சும்மல் பாய்ஸ் படம் பார்த்துள்ளார் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி.
ஐபிஎல் திருவிழா தொடங்கி உள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் அமர்க்களமாக தொடங்கியது. அன்றைய தினம் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.
தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கினார். இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 173 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சென்னை அணி பொறுப்பாக விளையாடி 8 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து தங்களுடைய இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... தோனி வழியை பின்பற்றி சேப்பாக்கத்தில் வெற்றியை ருசித்த ருதுராஜ் –சிஎஸ்கேவை தோற்கடித்து 5,784 நாட்கள் ஓவர்!
சென்னை அணியின் அடுத்த போட்டியும் சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது. வருகிற மார்ச் 26-ந் தேதி நடைபெறும் அப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சிஎஸ்கே. இதனால் சென்னையிலேயே முகாமிட்டுள்ள சென்னை அணி வீரர்கள் நேற்று ஜாலியாக அவுட்டிங் சென்றிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக சென்னை அணியின் ஸ்டார் பிளேயரான எம்.எஸ்.தோனி நேற்று இரவு மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்து ரசித்திருக்கிறார். பந்துவீச்சாளர் தீபக் சஹார் உடன் சென்று சென்னை சத்யம் திரையரங்கில் அவர் இப்படத்தை கண்டுகளித்துள்ளார். அப்போது படம் முடிந்து வெளியே வந்த தோனியை பார்த்ததும் ரசிகர்கள் கத்தி விசிலடித்து ஆரவாரம் செய்துள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
and watched at Sathyam last night.
pic.twitter.com/MZ9A3AN1BO
இதையும் படியுங்கள்... மதுபான லோகோ இல்லாத சிஎஸ்கே ஜெர்சியில் விளையாடிய முஷ்தாபிஜூர் ரஹ்மானுக்கு குவியும் பாராட்டு!