Lokesh Kanagaraj : இனிமேல் என்ற இசை ஆல்பத்தில், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், பிரபல நடிகை ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் பல வெற்றி திரைப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து புகழின் உச்சியில் இருக்கும் ஒரு இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். "மாநகரம்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பிறகு கார்த்தி நடிப்பில் வெளியான "கைதி" திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் அவர்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான "மாஸ்டர்" மற்றும் "லியோ" ஆகிய இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்த அவர், தனது கனவு நாயகனான உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை வைத்து "விக்ரம்" திரைப்படத்தை இயக்கி தூள்கிளப்பினர். தொடர்ச்சியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இந்த நிலையில் ஏற்கனவே மாஸ்டர் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நாடிருந்தாலும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் பாடல் வரிகள் எழுதும் "இனிமேல்" என்கின்ற இசை ஆல்பத்தில் நடிகராக களமிறங்கியுள்ளார் அவர். மேலும் இந்த பாடலை கம்போஸ் செய்தது ஸ்ருதிஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் "இனிமேல்" ஆல்பம் குறித்த ஒரு டீசர் வெளியானது, அதில் லோகேஷ் கனகராஜ் மற்றும் சுருதிஹாசன் மிகவும் நெருக்கமாக நடிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. பல திரை பிரபலங்களும் கூட இருவரையும் வேடிக்கையாக கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் துவங்கி உள்ள நிலையில், அதை பார்ப்பதற்காக சுருதிஹாசன், லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல நடிகர் சதீஷ் அவர்களும் ஸ்டேடியத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருவரையும் இணைத்து கலாய்த்து வருகின்றனர். சக நடிகையுடன் இணைந்து மேட்ச் பார்க்க சென்றது ஒரு குத்தமா என்பது போல லோகேஷ் கனகராஜ் மைண்ட் வாய்ஸ் உள்ளதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.