மனைவி கர்ப்பம்... மருத்துவர் சொன்ன விஷயம்! படப்பிடிப்பை நிறுத்த சொன்ன ஷாருக்கான்! கண் கலங்க வைத்த அட்லீ!

By manimegalai a  |  First Published Aug 30, 2023, 10:49 PM IST

'ஜவான்' படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென்ட் நிகழ்ச்சியில், தன்னுடைய மனைவி குறித்து அட்லீ கண் கலங்கியபடி பகிர்ந்து கொண்ட தகவல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
 


பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம், உதவி இயக்குனராக இருந்த அட்லீ... நயன்தாரா, ஆர்யா, நஸ்ரியா, ஜெய், ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 'ராஜா ராணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.  இதை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில், என அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களை இயக்கிய இவர், திடீரென நடிகர் ஷாருகானை வைத்து பான் இந்தியா படமான 'ஜவான்' படத்தை இயக்கம் உள்ளதாக அறிவித்தார்.

அந்த வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், தற்போது உருவாக்கியுள்ள 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் இந்த படத்தின் பிரீ ரிலீஸ் ஈவென்ட் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 'ஜவான்' படத்தில் நடித்துள்ள பிரபலங்களான விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி, இசையமைப்பாளர் அனிருத், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஆனால் நடிகை நயன்தாரா தன்னுடைய கொள்கையின் படி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

79-ஆவது பிறந்தநாளை மகள்களுடன் கொண்டாடிய பழம்பெரும் நடிகர் விஜயகுமார்! வைரலாகும் பர்த்டே போட்டோஸ்!

இந்நிலையில் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படம் இயக்கி உள்ளது குறித்து, பேசிய அட்லீ... "கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு, 'எந்திரன்' படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை வந்தபோது... ஷாருக்கான் வீட்டு வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும், அதன் பின்னர் 13 வருடங்களுக்கு பின்னர் ஷாருக்கானின் வீட்டுக்கு சென்றதாகவும்... அப்போது தன்னை வரவேற்க அவர் காத்திருந்ததாகவும் கூறி மெய் சிலிர்த்தார். பின்னர் இந்த படத்தின், பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியை சாய்ராம் கல்லூரியில் நடத்துவதற்கு காரணம் இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் சார், இங்கு படித்தார் என்பதால் தான் என்றும், இந்த காரணத்தை கூறி, இங்கு நடத்தலாம் என கூறிய போது ஷாருக்கான் ஒப்புக்கொண்டதற்கு நன்றி என தெரிவித்தார். பின்னர் தொடர்ந்து பேசியவர் பல்வேறு விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்".

79-ஆவது பிறந்தநாளை மகள்களுடன் கொண்டாடிய பழம்பெரும் நடிகர் விஜயகுமார்! வைரலாகும் பர்த்டே போட்டோஸ்!

குறிப்பாக தன்னுடைய வெற்றிக்கு காரணம் மனைவி பிரியா தான் என்றும், 'ஜவான்' படத்தின் பணிக்காக நானும் பிரியாவும் அமெரிக்காவுக்கு சென்றபோது... பிரியா கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் பிரியா கர்ப்பமாக இருப்பதால், மருத்துவர்கள் மூன்று மாதத்திற்கு டிராவல் செய்யக்கூடாது என கூறிவிட்டனர். ஆனால் அப்போது மூன்று நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருந்தது. இது குறித்து ஷாரூக்கானிடம் கூறிய உடனே அவர் படப்பிடிப்பை நிறுத்த சொல்லியதோடு, காத்திருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் பிரியா படப்பிடிப்பை நிறுத்த வேண்டாம். என்னை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் படத்தின் வேலையை பாருங்கள் என என்னை ஊக்குவித்தார். பிரியாவின் ஒத்துழைப்பு தான் என்னுடைய வெற்றியின் ரகசியம் என கண் கலங்கியபடி அட்லீ கூறினார்.

பேராபத்தில் சிக்கிய கயல்..! தங்கையை காப்பாற்ற எடுக்க போகும் அதிரடி முடிவு? கேள்விக்குறியாகும் எழில் வாழ்க்கை!

அதேபோல் படத்தின் வெற்றி தோல்வியை பற்றி கவலை இல்லை. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன் என்று கூறியுள்ள அட்லீ, பின்னர் தன்னிடம் ஷாருக்கான் இந்த விழாவுக்கு வர வேண்டுமா? என்று கேட்டதாகவும், ஏன் என நான் கேட்டபோது நான் வேறு மொழி நடிகன் என்னை தமிழ் ரசிகர்களுக்கு தெரியுமா என்பது போல் கேட்டார். அதற்கு நான்.. நீங்கள் வாருங்கள், உங்கள் மீதான அன்பை நாங்கள் காட்டுகிறோம் என்றேன். அதற்கு ஏற்ற போல் ரசிகர்களும் அவர் மீது அன்பை பொழிந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

click me!