
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் சுவாமி தரிசனம் செய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆவணி திருவிழா நடைபெற்று வருகிறது. ஆவணித் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில் நடிகர் யோகி பாபு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். கோவிலில் மூலவர், சத்ரு சம்ஹார மூர்த்தி, வள்ளி தெய்வானை, பெருமாள், ஆகிய சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் யோகி பாபுவை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் யோகி பாபு கோவில் தூய்மை பணியாளரிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தார்.
இதையும் படியுங்கள்... சூப்பர் ஸ்டாருடன் பிரச்சனையாம்? தலைவர் 171.. கைவிடுகிறாரா லோகேஷ் கனகராஜ்? கொளுத்திப்போடும் நெட்டிசன்கள்!
யோகிபாபு நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடி வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது. அதேபோல் பாலிவுட்டில் அவர் நடித்துள்ள ஷாருக்கானின் ஜவான் திரைப்படமும் கடந்த வாரம் திரைக்கு வந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஜவான் திரைப்படம் நான்கே நாளில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது.
இதுதவிர காமெடியனாகவும், ஹீரோவாகவும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் யோகிபாபு. தற்போது அவர் கைவசம் டஜன் கணக்கிலான திரைப்படங்கள் உள்ளன. அந்த படங்களெல்லாம் வெற்றிபெற வேண்டி தான் அவர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஆள விடுங்கடா சாமி... ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு வந்து தலைதெறிக்க ஓடிய ரசிகர்கள் - காசெல்லாம் வேஸ்ட் என குமுறல்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.