ஜி20 மகத்தான வெற்றி.. இந்தியன் என்பதில் பெருமைகொள்கிறேன் - பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன அக்‌ஷய் குமார்!

Ansgar R |  
Published : Sep 10, 2023, 11:27 PM IST
ஜி20 மகத்தான வெற்றி.. இந்தியன் என்பதில் பெருமைகொள்கிறேன் - பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன அக்‌ஷய் குமார்!

சுருக்கம்

பிரபல நடிகர் ஷாருக்கானை தொடர்ந்து, இப்போது பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் டெல்லியில் நடந்து முடிந்த ஜி20 உச்சிமாநாட்டின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளார். 

இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில், நடிகர் அக்‌ஷய் குமார் ஜி20 வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக, மோடியின் தலைமையில் நாடு முழுவதும் முன்னேறும் என்று ஷாருக்கான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவர் இன்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த G20 உச்சிமாநாட்டின் அருமையான வழி. வசுதைவ குடும்பகம் என்பதை பாரதத்தின் தலைமை நிரூபித்துள்ளது. இந்தியர்களாகிய நாம் இன்று பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்கிறோம். நன்றி மோடி ஜி... அனைவருக்கும் நன்றி. ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்" என்று கூறியிருந்தார். 

ஒருகாலத்தில் ஹோட்டலில் சர்வர் வேலை.. இன்று அம்பானி, டாட்டாவோடு தொழில் பார்ட்னர் - யார் இந்த Jensen Huang?

இன்று செப்டம்பர் 10ம் தேதி, ஜி20 மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்தார். இதையடுத்து அடுத்த பொறுப்பு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டது. வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு ஆர்வமுள்ள பிரச்சினைகளில் இந்தியாவின் முன்முயற்சிகளை லூலா முன்பு வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜி20 மாநாட்டை நடத்தும் நாடாக இந்தியாவின் முன்முயற்சியையும் அவர் பாராட்டினார். இன்று ஞாயிற்றுக்கிழமை, ஜி 20 மாநாட்டின் நிறைவு உரையில் பிரதமர் நரேந்திர மோடி, 'நேற்று, ஒரு உலகம் ஒரே குடும்பம் என்ற அமர்வில் விரிவாக விவாதித்தோம். இன்று G20 ஒரு உலகம், ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம், ஆகியவற்றை நோக்கிய நம்பிக்கையான முயற்சிகளுக்கான தளமாக மாறியுள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார். 

இந்தியா, பாரதம்... இரண்டு பெயர்களிலும் எனக்கு பிரச்சினை இல்லை: ராகுல் காந்தி பேச்சு

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?