கமலுடன் 'ஜப்பானின் கல்யாணராமன்' படத்தில் நடித்த குட்டி பையன் இந்த நடிகரா...?

First Published Feb 20, 2018, 4:48 PM IST
Highlights
jappanil kalyanaraman movie small boy tiku


எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், நடிகர் கமலஹாசன், ஸ்ரீ தேவி, ராதா, வி.கே.ராமசாமி, கவுண்டமணி, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 1985 ஆம் ஆண்டு, வெளியான திரைப்படம் 'ஜப்பானில் கல்யாணராமன்'.

கமலின் புதிய பரிமாணம்:

எப்போதும் வித்தியாசமான, கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வரும் கமலஹாசன். இந்த படத்தில் நீளமான பல் வைத்துக்கொண்டு வேறு மாதிரியான பரிமாணத்தில் தன்னுடய நடிப்பை வெளிப்படுத்தினார். கமலின் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று 100 நாட்களை கடந்து இந்த படம் ஓடி வசூல் சாதனைப் படைத்தது.

காமெடி கலக்கல்:

இந்த படத்தில், தமிழ்நாட்டில் இருந்து ஜப்பானுக்கு சென்று மொழி தெரியாமல் அல்லாடும் காமெடி கதாப்பாத்திரத்தில் நடிகை கோவை சரளா மற்றும் கவுண்டமணி நடித்து அசைத்தி இருப்பார்கள்.

குட்டி பையன்:

இந்த படத்தில் கமலுடன் ஒரு குட்டி பையன் நடித்திருப்பார். அவர் பெயர் டிங்கு. இவர் ஏற்கனவே ரஜினிகாந்துடன் 'அன்புள்ள ரஜினிகாந்த்', விஜயகாந்துடன் 'வைதேகி காத்திருந்தால்', 'தேவர் மகன்' உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியிருப்பார்.

சீரியலில் டிங்கு:

சிறிய வயதில் பல படங்களில் நடித்து பிரபலமான, இவருக்கு பெரிதானதும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக்கிடைக்க வில்லை. இதனால் சீரியல் நடிப்பதில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார். 

நடிகை தேவையான நடித்த கோலங்கள், அபிதா நடித்த 'திருமதி செல்வம்' ஆகிய தொடர்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலை:

நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சிறு வயதில் இருந்து நடனம் கற்று வந்த இவர் பிரபல தொலைகாட்சி நடத்திய  'ஜோடி நம்பர் 1' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு டைட்டில் வின்னர் ஆனார். தற்போது அமெரிக்காவில் நடனப் பள்ளி துவங்கி தன்னுடைய இரண்டாவது மனைவி கவிதா மற்றும் குடும்பத்தினரோடு வசித்து வருகிறார்.

click me!