
மங்காத்தா படத்தை அடுத்து அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அஜித் ரவுடியாகவும், அர்ஜுன் போலிஸாகவும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
சிவா-அஜித் நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘விஸ்வாசம்’. இதில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அஜித் படத்திற்கு முதன் முறையாக டி.இமான் இசையமைக்கிறார். விவேகம் படத்தைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2011ஆம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ படத்தில் அஜித்தும் அர்ஜுனும் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மங்காத்தாவின் பிரமாண்ட வெற்றியை மனதில் வைத்து அதே கூட்டணியை விஸ்வாசம் படத்தில் அமைக்க சிவா முயற்சித்துவருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில், அஜித் ரவுடியாகவும், அர்ஜுன் போலிஸாகவும் நடிக்க வாய்ப்புள்ளதாம். இந்நிலையில், ரவுடி கெட்டப்பில் நடிப்பதி உறுதி செய்யும் விதமாக அஜித் நேற்று துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் அஜித்தை பார்க்க ஏதோ கேங்ஸ்டர் லுக்கில் இருந்தார். இதன் மூலம் போலிஸ்-ரவுடி கதை அஜித் டபுள் ரோல் செய்கிறார் என்று ஒரு செய்தி கசிந்துள்ளது. இது குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.