
இப்போது பல மாவட்டங்களிலும் தீயாய் பற்றி எரியும் மாபெரும் போராட்டமாக வெடித்துள்ளது ஜல்லிக்கட்டு பிரச்சனை, தங்களுடைய உரிமை மற்றும் கலாச்சாரத்தை யாருக்கும், எதற்காகவும் விட்டு கொடுக்க முடியாது என்கிற முனைப்புடன் போராட்டத்தில் குதித்துள்ளனர் இளைஞர்கள்.
அதே போல பிரபலங்களும் ஒருபக்கம் தங்களை வாழ வைக்கும் தமிழர்கள் போராடும் போது பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் நாங்களும் தமிழர்கள் தான் என போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் காமெடியனாக பலரை சிரிக்க வைத்து இன்று முன்னணி நாயகர்கள் பட்டியலில் இடம் பிடிக்க தயாராகி கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் நம்முடைய பாரம்பரியமான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. இதை தடை செய்ய யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்றும் . இதை மறுபடியும் நடத்தனும் என்று போராடும் எல்லாருக்கும் என் ஆதரவு உண்டு. தடைகளை உடை, புதிய சரித்திரம் படை, வாழ்க தமிழ் என கூறியுள்ளார்.
இது போன்று பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருவது ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.