ரஜினி போட்ட ஆர்டர்? 100 குழந்தைகள் ஆபரேஷனுக்கு 1கோடி வழங்கிய கலாநிதிமாறன் மனைவி! குவியும் வாழ்த்து!

Published : Sep 05, 2023, 07:16 PM IST
ரஜினி போட்ட ஆர்டர்? 100 குழந்தைகள் ஆபரேஷனுக்கு 1கோடி வழங்கிய கலாநிதிமாறன் மனைவி! குவியும் வாழ்த்து!

சுருக்கம்

'ஜெயிலர்' படத்தின் வெற்றியால் சன் பிக்சர்ஸ் நிறுவனம், பல கோடி லாபம் பார்த்துள்ள நிலையில், தற்போது இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கலாநிதி மாறனின் மனைவி காவேரி 100 குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காக ரூ. 1 கோடி வழங்கியுள்ளார்.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி  உலகம் முழுவதும் சுமார் 4000-திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில், மற்ற மாநிலங்களிலும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். அதேபோல் வெளிநாடுகளிலும் தரமான வெற்றியை பதிவு செய்து கொள்ளை லாபம் பார்த்துள்ளது.

இதுவரை சுமார் 600 கோடிக்கு மேல் ஜெயிலர் திரைப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படம் எடுக்க செலவு செய்யப்பட்ட பட்ஜெட்டை விட, பல கோடி ரூபாய் இப்படம் லாபம் கொடுத்துள்ளதால்... சன் பிக்சர்ஸ் நிறுவனரும், தயாரிப்பாளருமான, கலாநிதி மாறன் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார். இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு சுமார் 110 கோடி வரை ஷேர் கொடுத்ததாகவும், அன்பு பரிசாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை பரிசாக கொடுத்த வீடியோக்களும் வெளியாகி வைரல் ஆனது. அதேபோல் இந்த படத்தின் இயக்குனரான நெல்சன் திலீப் குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர்களுக்கு, குறிப்பிட்ட தொகையை செக்காக கொடுத்தது மட்டுமின்றி போச்சு கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

ரைட்டு விடு... ஒரே வார்த்தையில் ஓவராய் பேசிய குணசேகரனை அடக்கிய அப்பத்தா! எதிர்நீச்சல் அப்டேட்!

இதைத்தொடர்ந்து கலாநிதி மாறன் பட குழுவினருக்கும், இந்த படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றியவர்களுக்கும் ஏதேனும் இன்ப அதிர்ச்சி கொடுப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... தற்போது ஜெயிலர் படத்தின் வெற்றியை குழந்தைகளுக்கு உதவிகள் செய்து கொண்டாடியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் விஜயகுமார் வீட்டு வாரிசு? 3 பிரபலம் பற்றி கசிந்த தகவல்

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் கொண்ட 100 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக, ரூ.1 கோடிக்கான காசோலையை அப்பல்லோ சேர்மன் பிரதாப் ரெட்டியிடம் வழங்கியுள்ளார் கலாநிதி மாறனின் மாணவி காவேரி கலாநிதி. இதற்கு காரணம் கூட  ரஜினிகாந்த் என்றே கூறப்படுகிறது. எனினும் இந்த செயலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!