- Home
- Gallery
- பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் விஜயகுமார் வீட்டு வாரிசு? 3 பிரபலம் பற்றி கசிந்த தகவல்
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கும் விஜயகுமார் வீட்டு வாரிசு? 3 பிரபலம் பற்றி கசிந்த தகவல்
விரைவில் ஆரம்பமாக உள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள மூன்று முக்கிய பிரபலங்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தெலுங்கில், நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பமான நிலையில், போட்டியாளர்கள் பட்டியல் யாரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. சமூக வலைத்தளத்தை கவர்ச்சியால் கிறங்கடித்த கிரண், ஷகிலா, சீரியல் நடிகை ராதிகா போன்ற பலர் போட்டியாளர்களாக சென்றுள்ளனர்.
இதை தொடர்ந்து தமிழிலும், உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி அடுத்த மாதம், முதல் வாரத்தில் இருந்து ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. இதுவரை தேதியை அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், விஜய் டிவி தரப்பில் இருந்து இதுவரை 3 ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன் மூலம் இந்த முறை யாரும் எதிர்பார்த்திடாத மாற்றங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீடு என்பதை, உலக நாயகனும் உறுதி செய்துள்ள நிலையில்... போட்டியாளர்கள் தேர்விலும், யாரும் எதிர்பாராதவர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில்... பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ள 3 பிரபலங்கள் பெயர் இந்த லிஸ்டில் அடிபட்டு வருகிறது.
அந்த வகையில் 90-ஸ் கிட்ஸின் மனங்களை கொள்ளை கொண்ட நாயகியாக இருந்த, நடிகையும் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் இளைய மகளுமான ஸ்ரீதேவி விஜயகுமார் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும், அதே போல் நடிகர் யுதன் பாலாஜி, மற்றும் விஜய் டிவி சீரியல் நடிகை மற்றும் குக் வித் கோமாளி பிரபலமான ரவீனா தாஹா ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.