‘ஜகமே தந்திரம்’: ரகிட ரகிட ஆரம்பமானது..! கொண்டாடும் ரசிகர்கள்..!

Published : Jun 18, 2021, 02:03 PM IST
‘ஜகமே தந்திரம்’:  ரகிட ரகிட ஆரம்பமானது..! கொண்டாடும் ரசிகர்கள்..!

சுருக்கம்

கொரோனா பெருந்தோற்று காலத்தில், ரசிகர்கள் திரைப்படங்களை திரையரங்கில் வந்து பார்ப்பது சிறந்த முறையாக இருக்காது என்று, பல படங்களை ஓடிடி தலத்தில் ஸ்டீரிமிங் முறையில் ரசிகர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பது தான் பொழுதுபோக்குத் துறை வணிகத்தில் முதிய முயற்சியாக இருக்கிறது. இப்படி வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  

Netflix OTT தளத்தில்  இன்று 12 :30 மணிமுதல்  ‘ஜகமே தந்திரம்’ சுமார் 17 மொழிகளில். 190 நாடுகளில்,  200 மில்லியனுக்கும் அதிகமான ஓடிடி சந்தாதாரர்களை சென்றடைந்துள்ளது. இந்தப் படத்திற்கு உறுதுணையாக இருந்த பங்குதாரர்கள், இயக்குநர், நடிகர்கள், துறைத் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒத்துழைப்பாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் அனைத்து பங்களிப்பாளர்களும் படக்குழு தங்களது நன்றியை தெரிவித்துள்ளது.

பல்வேறு தடைகளை தாண்டி  இந்த கனவு படத்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் படக்குழுவினர் நிஜமாக்கியுள்ளனர். இரண்டு ஆண்டுகள் முன்பு 'ஜகமே தந்திராம்' அதிகாரபூர்வமாக அறிவிக்க பட்டதிலிருந்து இன்று வரை படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி என படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் படம் வெளியாவதற்கு தாமதம் ஆனாலும் எங்கள் மீது அன்பு செலுத்திய உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அனைவரின் ஊக்கமே எங்களை மேலும் உற்சாகப்படுத்தியது. உங்கள் அன்பை நீங்கள் எவ்வாறு பொழிந்தீர்கள், இந்த படம் தொடங்கியதிலிருந்தே எவ்வாறு கொண்டாடினீர்கள் என்பதை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம். 'ஜகமே தந்திராம்' இன்று உங்கள் இல்லம் தேடி வந்துவிட்டது. நீங்கள் அனைவரும் இதை பார்த்து, ரசித்து உற்சாகம் அடையுங்கள் என தெரிவித்துள்ளது. 
 
PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?