
பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், தமிழக செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்தின், வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆர்வம் இருப்பதாக கூறியுள்ளதால், விரைவில் இந்த படம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டதையும் ஒரு முறை இரண்டு முறை அல்ல 5 முறை பெற்று, உலகச் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளவர், தமிழகத்தை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி திரட்ட விஸ்வநந்தன் ஆனந்தத்துடன் நடிகர் அமீர் கான் செஸ் விளையாடிய நிகழ்ச்சி நடந்தது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடத்த இந்த விளையாட்டில் கிடைக்கும் நிதியை வைத்து கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ள செஸ் விளையாட்டு வீரர்கள், மற்றும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த், அமீர் கான் மட்டும் இல்லாது, மேலும் 4 முக்கியப் பிரபலங்கள் இந்த விளையாட்டில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் அமீர் கான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது விஸ்வநாதன் ஆனந்த் குறித்த வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டால் அதில் நடிப்பீர்களா என செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, கண்டிப்பாக நடிப்பேன் என கூறியுள்ளார். மேலும் ஓரளவு எனக்கு செஸ் தெரியும் என்றாலும், விஸ்வநாதன் ஆனந்த்தின் முழுமையான செஸ் அறிவை தெரிந்து கொண்டு அவருடைய பழக்க வழக்கங்களையும் உள்வாங்கிக் கொண்டு முழுமையாக நடிப்பை வெளிப்படுத்துவேன். இப்படி செய்யும்போது அவருடன் இன்னும் நேரத்தை செலவழிக்க முடியும் என்றும் அதற்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இப்படி ஒரு விஷயத்திற்காக தான் காத்திருப்பதாக அமீர் கான் கூறியதை தொடர்ந்து, விரைவில் இயக்குனர்கள் விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கையை படமாக எடுக்க முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.