50 ஆண்டுகால வரலாற்றில் அஜித் செஞ்ச தரமான சாதனை... கர்நாடக திரையுலகை மிரள வைத்த சம்பவம்!!

By sathish kFirst Published Feb 22, 2019, 1:55 PM IST
Highlights

கடந்த 50 ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை அஜித்துக்கு கிடைத்துள்ளது.  இந்த செய்தி அஜித் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்ததால் இத்திரைப்படம் 40 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 

Ajith's Jaga Malla, the Kannada version of , has got title clearance from the KFCC. The industry is ready to embrace dubbing, finally. pic.twitter.com/rJj0bmIbyC

— Prakash Upadhyaya (@prakash_kl_ibt)

ரஜினியுடன் 'பேட்ட' படத்துடன்  வெளியான இப்படம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஃபேமிலி ஆடியன்ஸை தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வரவழைத்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் பி மற்றும் சி சென்டர்கள் கிராமப்புற பகுதிகள் எதிர்பாராத வரவேற்பு கிடைத்தது. 

கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ்மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம், நல்ல வரவேற்பை பெற்றதால்,  கர்நாடகா விநியோகஸ்த உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் படத்தை கன்னடத்தில் டப் செய்து "ஜகா மல்லா" என்ற பெயரில் வெளியிட திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், "ஜகா மல்லா" படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து தணிக்கையில் ‘யு’ சான்றிதழை பெற்றுள்ள நிலையில், கன்னடத்தில் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. அதேபோல விஸ்வாசம் தெலுங்கு பாதிப்பும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் படம் வருகிற மார்ச் 1-ல் ரிலீசாக இருக்கிறது. என்னதான் பிக் பட்ஜெட் படங்களாக இருந்தாலும் கர்நாடகாவில் பல மொழிப்படங்கள் வெளிவந்தாலும், அவை கன்னடத்தில் டப் செய்து வெளியிடுவதில்லை, இந்நிலையில் கடந்த 50 ஆண்டில் வேறு எந்த ஒரு இந்திய நடிகரும் செய்யாத வரலாறு படைத்துள்ளார் அஜித். 

click me!