
'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக அறியப்பட்டு, பல சின்னத்திரை ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தவர் தொகுப்பாளினி 'ஜாக்குலின்'.
இதை தொடந்து, நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தில், நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடந்து, நல்ல கதைகள் வந்தால் மட்டுமே நடிப்பேன் என பேட்டிகளில் கூறி இருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் அம்மணி சின்னத்திரை பக்கமே திரும்பியுள்ளார். இவர் விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள 'தேன்மொழி பி.ஏ' என்கிற சீரியலில் நடிக்கிறார்.
வீட்டில் செல்ல மகளாக, சுதந்திரமாக வளரும், இவர் ஊராட்சி தலைவராக ஆவதும், இதனால் அந்த ஊரை சேர்ந்த பெரிய மனிதர் இவரை தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். இதை வைத்து மருமகளை கொடுமை படுத்த நினைக்கிறார் மாமியார், ஆனால் அவருக்கு சிரித்தவாரே செம மொக்கை கொடுக்கிறார், ஜாக்குலின்.
இந்த சீரியலுக்கு 'தேன்மொழி பி.ஏ' என பெயரிட்டுள்ளனர். இதில் ஜாக்குலின் மிகவும், குறும்புத்தனமான பெண்ணாக நடித்துள்ளார். இந்த சீரியல் குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.