காதலனுடன் நெருக்கமாக இருந்த போட்டோஸை வெளியிட்ட பிரபல நடிகரின் மகள்... லாக்டவுனால் வெளியான ரகசியம்...!

Published : May 02, 2020, 05:53 PM IST
காதலனுடன் நெருக்கமாக இருந்த போட்டோஸை வெளியிட்ட பிரபல நடிகரின் மகள்... லாக்டவுனால் வெளியான ரகசியம்...!

சுருக்கம்

காதலர் எபன் ஹையாம்ஸுடன்  சிறிது காலம் வசித்து வந்தார். அப்போது அவர்கள் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், தமிழில் ஆரண்ய காண்டம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் உடன் கோச்சடையான், ஷாந்தனுவின் முப்பரிமாணம், விஜய் நடிப்பில் வெளியான பிகில் ஆகிய படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். தற்போது சூர்யாவின் சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார். இந்தி திரையுலகில் மாஸ் காட்டி வரும் இளம் நடிகரான டைகர் ஷெராப், ஜாக்கி ஷெராப்பின் மகன் ஆவார். அவரது மகள் கிருஷ்ணா ஷெராப். 

இதையும் படிங்க: கண்ணீர் விட்டு கதறிய நயன்தாரா... இயக்குநர் காலில் விழுந்து அழுத வைரல் வீடியோ...!

ஜாக்கியின் செல்ல மகளான இவர், அவ்வப்போது சோசியல் மீடியாவில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பி வருகிறார். கொஞ்ச நாட்களுக்கு முன்பு காதலர் உடன் பீச்சில் பிகினியில் சுற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.பிரபல நடிகரின் மகள் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் படுகவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

இதையும் படிங்க: அஜித்தையும் விட்டு வைக்காத மீரா மிதுன்... தீயாய் பரவும் இந்த போட்டோவை நீங்க பார்த்திருக்கமாட்டீங்க....!

கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் காதலருடன் பிகினியில் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, நெட்டிசன்களிடம் இடையில் வாங்கி கட்டிக்கொண்டார். தற்போது லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தனது படுகவர்ச்சியான பிகினி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பேஸ்கெட் பால் வீரர் எபன் ஹையாம்ஸை காதலித்து வரும் கிருஷ்ணா, லாக்டவுனால் அவரை காண முடியாமல் ஏக்கத்தில் தவிக்கிறார் போல தெரிகிறது. 

இதையும் படிங்க: “டாப் ஆங்கிளில் மொத்தமும் தெரியுது”... பிரபல நடிகையின் கவர்ச்சி உடையை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

காதலர் எபன் ஹையாம்ஸுடன்  சிறிது காலம் வசித்து வந்தார். அப்போது அவர்கள் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தற்போது காதலர் சிட்னியிலும், கிருஷ்ணா மும்பையிலும் வசித்து வரும் நிலையில், இருவரும் லிப் பால் கொடுப்பது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து தனது காதலரை  மிகவும் மிஸ் செய்கிறேன் என்பதை அனைவருக்கும் காட்டியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 

 

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?