பழைய கஸ்தூரி வர்றாராம். கடைசியா பாக்குறவங்க ஒரு தடவை பாத்துக்கங்க’!!

Published : Oct 15, 2018, 11:21 AM IST
பழைய கஸ்தூரி வர்றாராம். கடைசியா பாக்குறவங்க ஒரு தடவை பாத்துக்கங்க’!!

சுருக்கம்

’ஆரண்ய காண்டம்’  படத்திற்குப் பின்னர் கஸ்தூரி ராஜா இயக்கும் ‘பாண்டி முனி’ படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப்.

’ஆரண்ய காண்டம்’ படத்தில் முழு நிர்வாண கோலத்தில் நடித்து பரபரப்பை உண்டாக்கிய ஜாக்கி ஷெராஃப் ‘பாண்டி முனி’யில் அகோரியாக நடிக்கிறார்.

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஒரு மாபெரும் கேப்புக்குப்பின் கஸ்தூரி ராஜா இயக்குநராக களம் காண்கிறார்.

‘இன்னும் கொஞ்சநாள் போனால் சினிமா டைரக்ட் பண்ணுவதே மறந்துவிடுமோ என்கிற அளவுக்கு பெரிய கேப் விழுந்துவிட்டது.  இந்தப்படம் பழைய கஸ்தூரி ராஜாவை கொண்டுவந்து நிறுத்தும்.

நாயகிகளாக மேகாலி ,ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் அறிமுகமாகிறார்கள்.

திருவண்ணாமலை அருகே வேட்டவலம்  ஜமீனுக்கு  சொந்தமான குளம் ஒன்று உள்ளது. ஐந்து ஏக்கர் பரப்பில் பாறைகள் நிறைந்த இடத்துக்கு நடுவே அந்த குளம்  இருக்கிறது. அந்த குளத்தில் சுமார் 4000 சதுர அடி அளவுக்கு இரும்பு தூண்கள் இரும்பு பலகைகளைக் கொண்ட  அரங்கு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மீது அமர்ந்து அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப் மற்றும் 400 அகோரிகள் பூஜை செய்வது போன்ற காட்சிகள் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினோம்.

என் சினிமா பயணத்தில் பாண்டிமுனி படம் வித்தியாசமான அனுபவத்தை எனக்கு தந்திருக்கிறது’ என்கிறார் கஸ்தூரிராஜா.

அகோரி வேடத்தில் படு அகோரமாக பார்க்க சகிக்கமாட்டாமல் இருக்கிறார் ஜாக்கி ஷெராஃப்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!