சின்மயி 4 முறை கருக்கலைப்பு செய்தாரா? அட்ஜஸ் பண்ணி வாய்ப்புகள் பெற்றாரா ? அவரே தரும் விளக்கம் !!

Published : Oct 15, 2018, 11:18 AM IST
சின்மயி 4 முறை கருக்கலைப்பு செய்தாரா? அட்ஜஸ் பண்ணி வாய்ப்புகள் பெற்றாரா ? அவரே தரும் விளக்கம் !!

சுருக்கம்

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ள பாடகி சின்மயி 4 முறை கருக்கலைப்பு செய்து கொண்டார் என்றும், அட்ஜஸ்ட் பண்ணித்தான் பாடுவதற்கு வாய்ப்புகள் பெற்றார் எனவும் மற்றொரு பாடகி சுசித்ராவின் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அதில் சுசித்ராவின் குற்றச்சாட்டு பொய்யானது என மறுத்துள்ளார்.

திரையுலகில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும்  மீ டூ மூவ்மெண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இநநிலையில் கவிஞர் வைரமுத்து மீது, பாடகி சின்மயி படு பயங்கரமாக பாலியல் குற்றச்சாட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

ஆனால் சின்மயி   ஆதாரம் இல்லாமல் விளம்பரம் தேடுவதற்காக  பொய் புகார் தெரிவித்தாக நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். அவர்கள் தங்கள்  டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் கடந்த ஆண்டு  பாடகி சுசித்ரா, தனது  சுசி லீக்ஸின் ஒரு பகுதியாக சின்மயி குறித்து தெரிவித்ததை தேடிக் கண்டுபிடித்து பதிவிட்டுள்ளனர்

அதில் 2016ம் ஆண்டில் பாடகி சின்மயி 4 முறை கருவை கலைத்ததாகவும்,  சின்மயி அட்ஜஸ்ட் செய்து கொண்டுதான் பாடுவதற்கு வாய்ப்புகள் பெறுவதாகவும்  குறிப்பிட்டிருந்த சுசித்ராவின் ட்வீட்டுகளை மற்றும் வீடியோவை வெளியிட்டு  கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதில் அளித்துள்ள பாடகி சின்மயி, நெட்டிசன்கள் தன்னை தொடர்ந்து கேவலமாக விமர்சித்தற்கும்,  சுசிலீக்ஸ் குறித்த  உண்மையை தெரிவிப்பதற்கும் இது தான் எனது பதில் என கூறி முகநூலில்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தான் 4 முறை கருகலைப்பு எல்லாம் செய்யவில்லை என்றும், சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டிருந்தபோது என்னை பற்றி தவறாக பேசினார். அதில் உண்மை இல்லை. அதற்காக அவர் இமெயில் மூலம் மன்னிப்பு கேட்டார். அந்த இமெயிலை பப்ளிக்காக வெளியிட வேண்டும் என்று தோன்றவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுசித்ராவின் கணவர் கார்த்திக் குமார் ,  சுசித்ராவுக்கு மனநலம் சரியில்லாதபோது அவர் சின்மயி மீது புகார் தெரிவித்தார் என்று ட்வீட் செய்துள்ளார் என்றும் அதை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் பட வாய்ப்பு பெறுவதற்காக  தான் எந்த அட்ஜஸ்ட்மென்ட்டும் செய்யவில்லை என்றும் சின்மயி மறுத்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Jailer 2 Release Date : அலப்பறை கிளப்ப வரும் டைகர் முத்துவேல் பாண்டியன்... ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு
Soundarya Death: 2 லட்சத்துக்காக உயிரை விட்ட சௌந்தர்யா.. பகீர் கிளப்பும் பிரபல இயக்குநர்!