ஹோம்லியிலிருந்து சூப்பர் செக்ஸி பெண்ணாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்! இதயத்தை பறிகொடுத்த ரசிகர்கள்! டிரெண்டிங்கான புதிய ஹாட் புகைப்படங்கள்!

Published : Dec 12, 2019, 10:23 AM ISTUpdated : Dec 12, 2019, 10:38 AM IST
ஹோம்லியிலிருந்து சூப்பர் செக்ஸி  பெண்ணாக  மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்!  இதயத்தை பறிகொடுத்த ரசிகர்கள்! டிரெண்டிங்கான புதிய ஹாட் புகைப்படங்கள்!

சுருக்கம்

காக்கா முட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார்.   

தொடர்ந்து, விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்திவரும் அவர், அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் 4 ஹீரோயின்களில் ஒருவராக நடிக்கிறார்.

சமீபத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான மிஸ் மேட்ச் தெலுங்கு படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து, சிவா நிர்வாணா இயக்கத்தில் நானி நடிக்கும் புதிய திரைப்படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள அவர், தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

இதுதவிர, துருவ நட்சத்திரம்,  க/பெ ரணசிங்கம் என விக்ரம், விஜய்சேதுபதி உள்ளிட்டோருடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள படங்கள், அடுத்தடுத்து ரிலீசுக்கு ரெடியாக வருகின்றன. 

இப்படி, தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், புதிதாக ஃபோட்டே ஷுட் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது பிரபல பத்திரிகைக்காக ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தியுள்ளார். 

அவரது இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதற்கு காரணம், ஹோம்லியிலிருந்து செக்ஸி கேர்ளாக ஐஸ்வர்யா ராஜேஷ் அவதாரம் எடுத்திருப்பதுதான். 

அவரது ஹாட் புகைப்படங்களைக் கண்டு இதயத்தை பறிகொடுத்த ரசிகர்கள், ஐஸ்வர்யா ராஜேஷ் என்ற பெயரிலேயே ஹேஷ் டேக்கை உருவாக்கி அந்த புகைப்படங்களை. பகிர்ந்து இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து கொண்டாடி தீர்த்துவிட்டனர். 

அத்துடன், கண்கவர் மாடர்ன் ஆடைகளில், செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும்  ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்குகளையும் குவித்து வருகின்றன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!
பாசத்தை உலுக்கிய துயரங்கள்; பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்த சோக சம்பவங்கள்!