
கடந்த 2012ம் ஆண்டு நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்ட கரீனா கபூருக்கு, தற்போது தைமூர் என்ற அழகான குழந்தை உள்ளது.
திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தையும் பராமரித்துக்கொண்டு, சினிமாவிலும் சிறப்பாக கவனம் செலுத்தி வரும் கரீனா கபூர், தற்போது குட் நியூஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.
வாடகை தாயை மையப்படுத்திய கதையுடன் உருவாகியுள்ள இந்தப் படத்தில், அக்ஷய் குமாருக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். மற்றொரு ஜோடியாக தில்ஜித் தோசஞ்ச், கியாரா அத்வானி நடித்துள்ளனர்.
கரண் ஜோஹர் தயாரிப்பில் ராஜ் மேத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள குட் நியூஸ் படம், வரும் டிசம்பர் 27ம் தேதி ரிலீசாகவுள்ளது.இதனையடுத்து, படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் கரினா கபூர், சமூக வலைதளத்திலும் ரொம்பவே ஆக்டிவ்வாக உள்ளார்.
தற்போது ரேடியோ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அங்கு எடுக்கப்பட்ட அட்டகாசமான ஸ்டைலிஷ் புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
எங்கும் நீலம், எதிலும் என்பது போல் நீல நில உடையில், கிறங்கடிக்கும் லுக்கில் படுஸ்டைலாக கரீனா கபூர் இருக்கும் இந்த புகைப்படங்கள், ரசிகர்களின் லைக்குகளை குவித்து வருகின்றன.
இன்றைய இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஒவ்வொரு புகைப்படத்திற்கும் விதவிதமான முகபாவனைகளை காட்டி அசரடித்திருக்கும் கரீனா கபூரை, பேரழகி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.