
முன்னணி ஹீரோயின்களை ஆச்சரியப்படும் அளவுக்கு சாயிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.
பின்னர், இருவீட்டாரின் சம்மதத்துடன் ஆர்யாவும், சாயிஷாவும் திருமண பந்தத்தில் இணைந்தனர். தன்னை விட வயதில் 17 வயது இளையவரான சாயிஷாவை ஆர்யா திருமணம் செய்ததைக் கண்டு ரசிகர்கள் மட்டுமல்ல சிங்கிள்ஸ்சாக இருப்பவர்களும்கூட பொறாமைபட்டனர்.
இதனையடுத்து, சூர்யாவின் காப்பான் படத்தில் இணைந்து நடித்த ஆர்யாவும், சாயிஷாவும், தற்போது, டெடி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இன்று (டிச.11) பிறந்தநாள் கொண்டாடிய காதல் கணவர் ஆர்யாவுக்கு, சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் ரொமாண்டிக்காக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில், "நீங்கள் ஒரு மிகவும் வியக்கத்தக்க மனிதர் என்பது எனக்கு தெரியும்!
நீங்கள் அனைத்து சிறப்புகளையும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். ஐ லவ் யூ சோ மச்...! என்று வாழ்த்து கூறி, மாலத்தீவில் கணவர் ஆர்யாவுடன் ரொமாண்டிக் மூடில் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
காதல் மனைவியின் பிறந்தநாள் வாழ்த்தை ரீ-ட்வீட் செய்து பதிலளித்துள்ள ஆர்யா, டேங்க் யூ மை வொய்ஃபீ... லவ் யூ... என பதிவிட்டுள்ளார். விதவிதமான போஸ்களில் ஆர்யாவும், சாயிஷாவும் ரொமான்ஸ் செய்திருக்கும் இந்த புகைப்படங்கள், ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகின்றன.
அத்துடன், சிங்கிள்ஸ்களையும் வெறுப்பேத்தி வருகின்றன. இவ்விருவரும் நெருக்கத்துடன் ஹேப்பியாக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த சிலர், "சிங்கிள்ஸ்கள வெறுப்பேத்துறதே வேலையா போச்சு..!" என நொந்தபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.