
பாலிவுட், கோலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை தனக்கென மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கியுள்ளவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் மும்பையில் உள்ள ஜுஹு பகுதியில் வசித்து வருகிறார்.
இவருடைய தாயார் பிருந்தா ராய், பந்த்ரா பகுதியில் உள்ள லாமெர் என்னும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இங்கு தான் ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு முன் பல வருடங்கள் வசித்தார். இதே அடுக்கு மாடிக் குடியிருப்பில் தான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சில வருடங்களுக்கு முன் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் தாய் தங்கியிருந்த 16 மாடிகள் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்பில் 13வது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதை அறிந்ததும் விரைந்து வந்த 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 45 நிமிட கடுமையான போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
இந்தச் செய்தியை அறிந்ததும், ஐஸ்வர்யா ராய் தன்னுடைய கணவர் அபிஷேக் பச்சனுடன் அவர் தாயைப் பார்க்க கதறி அடித்துக்கொண்டு வந்தார். பயத்தில் அழுத ஐஸ்வர்யா ராயை அவருடைய கணவர் சமாதானம் செய்தார். பின் தன்னுடைய தாயார் பத்திரமாக இருக்கிறார் என்று அறிந்ததும் சமாதானமடைந்து, அவரையும் தன்னுடைய காரில் அழைத்துக் கொண்டு சென்றார்.
அதிருஷ்டவசமாக இந்தத் தீ விபத்தில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. கட்டடம் மட்டும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.