மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் இணையும் ஐஸ்வர்யாராய்...

 
Published : May 25, 2017, 05:00 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் இணையும் ஐஸ்வர்யாராய்...

சுருக்கம்

ishwarya rai acting manirathnam movie

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த காற்று வெளியிடை திரைப்படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து  அடுத்ததாக அவர் 'ராம்சரண் தேஜா' நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், இந்த படத்தில்  வில்லனாக அரவிந்தசாமி நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு 'யோதா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகி ஐஸ்வர்யாராய் என்ற தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் 'இருவர்', 'குரு' மற்றும் 'ராவணன்' ஆகிய படங்களில் ஐஸ்வர்யாராய் நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தில் ஐஸ்வர்யா நடிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ