
'பாகுபலி 2' படத்துக்கு இந்திய திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா பாகுபலி படத்தில் நடித்த ரம்யாகிருஷ்ணன் மற்றும் பிரபாஸை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
2015-ஆம் ஆண்டின் பாக்ஸ் ஆபிஸை வசூல் சுனாமியால் அடித்து சென்ற பெருமைக்குரிய படமான 'பாகுபலி'யின் 2-ஆம் பாகத்தின் ரிலீஸுக்காக கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து சினிமா நட்சத்திரங்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?’ என்ற கேள்விக்கு விடையாக பல தடைகளை உடைத்தெறிந்து கடந்த மாதம் 28-ஆம் தேதி ‘பாகுபலி 2’ தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடத்தில் வெளியானது.
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்போடு, வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது 'பாகுபலி 2'. தெலுங்கு தவிர்த்து மற்ற மொழிகளில் பெரிய நட்சத்திரங்கள் யாரும் நடிக்காத போதும் கூட தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளுடன் ஓடிவருகிறது படம்.
இந்தியா மட்டுமன்றி உலகளவில் பல்வேறு வசூல் சாதனைகளை செய்துள்ளது 'பாகுபலி 2'. முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதுவரை உலக முழுவதும் சுமார் ரூ. 1,500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ரூ. 1,500 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது பாகுபலி 2.
இந்நிலையில், பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா பாகுபலி 2 படம் பார்த்துவிட்டு தனது கருத்துகளை ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். பாகுபலி 2 படத்தை பார்த்தவர்கள் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை பார்த்து சிவகாமி கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது. என்ன ஒரு பெர்பாமென்ஸ் என்று ரம்யா நடிப்பை பாராட்டியுள்ளார். அதுமட்டுமல்ல பாகுபலியாக நடித்த படத்தின் நாயகன் பிரபாஸை பார்த்து செத்துட்டேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.