'காலா' குறித்து மனம் திறந்த பா.ரஞ்சித்....

 
Published : May 25, 2017, 04:36 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
'காலா' குறித்து மனம் திறந்த பா.ரஞ்சித்....

சுருக்கம்

kaala movie director ranjith open talk

கோலிவுட் இயக்குனர்கள் அனைவருக்கும் திரைப்படத்தையாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்க வேண்டும் என்பது ஆசை உண்டு. ஆனால் அது ஒரு சிலருக்கு மட்டுமே சாத்தியம்.

இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் திரைப்பட துறைக்கு வந்து சில வருடங்களே ஆகியுள்ளபோதும். இவர் ரஜினிகாந்தை வைத்து இரண்டாவது திரைப்படத்தை இயங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

கடந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இவர் இயக்கத்தில் வெளிவந்த, கபாலி திரைப்படத்திற்கு உலக அளவில் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் ரஜினியை வைத்து இயக்கம் ரஞ்சித் இந்த படத்தின் தலைப்பை இன்று வெளியிட்டார் இது குறித்து அவர் பேசுகையில், 

இந்த படத்தின் தலைப்பை முதலில் ரஜினிகாந்திடம் கூறியதுமே அவருக்கு அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. மேலும் கரிகாலன் என்பது அவருக்கு மிகவும் பிடித்த பெயர். அதே போல காலா என்றால் எமன் என்கிற ஒரு அர்த்தமும் உள்ளது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 28 தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், இந்த படத்தில் நடிப்பவர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ