மது போதையில் கார் ஓட்டினாரா யாஷிகா ஆனந்த்?... ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்ட காரணம் என்ன?

By Kanimozhi PannerselvamFirst Published Jul 26, 2021, 2:39 PM IST
Highlights

சாலை விபத்தில் சிக்கி சாலை விபத்தில் சிக்கி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை யாஷிகா ஆனந்தின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகையான யாஷிகா ஆனந்த் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு பார்ட்டில் ஒன்றில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் டாடா ஹேரியர் காரை படுவேகமாக ஓட்டியுள்ளார்.  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூலேறிக்காடு என்ற பகுதி  அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவுடன் முன் இருக்கையில் தோழி வள்ளி செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் இருக்கையில் நண்பர்களான சையது, ஆமீர் மற்றும் கார் ஓட்டிய யாஷிகா ஆனந்த் ஆகியோர் படுகாயங்களுடன் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

யாஷிகா ஆனந்திற்கு முதுகு, கால், கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சுய நினைவுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து தகவல் கேள்விப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்த மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் யாஷிகா ஆனந்த் மீது  3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

யாஷிகாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மதுபோதையில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நள்ளிரவு பார்ட்டியில் பங்கேற்றாலும் யாஷிகாவிற்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது என நண்பர்கள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. யாஷிகா ஆனந்த் மீது அதிக வேகமாக கார் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் வழக்கு முடியும் காரை இயக்க கூடாது. எனவே மாமல்லபுரம் போலீசார் யாஷிகாவின் டிரைவிங் லைசன்ஸை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால், உடல் நலம் தேறி வந்த பிறகே சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!