Blue sattai Maaran : விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றபோது, அங்கு வந்த அஜித் ரசிகர்கள் அவரை அடித்ததாக கூறி இரண்டு புகைப்படங்கள் டுவிட்டரில் வைரலாக பரவி வந்தன.
கதை திருட்டில் சிக்கிய வலிமை
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரிலீசானது முதல் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இப்படத்தின் கதை பாபி சிம்ஹா நடித்த மெட்ரோ படத்தை காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
விமர்சித்த மாறன்
குறிப்பாக சினிமா விமர்சகரும், ஆண்டி இந்தியன் படத்தின் இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் வலிமை படத்தை பாரபட்சம் இன்றி விமர்சித்திருந்தார். அவர் அஜித்தை உருவகேலி செய்ததாக சர்ச்சை எழுந்தது. இதற்காக நடிகர்கள் ஜான் கொக்கேன், ஆர்.கே.சுரேஷ், ஆரி ஆகியோர் ப்ளு சட்டை மாறனை கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
அஜித் ரசிகர்கள் அடித்தார்களா?
இந்த விமர்சனங்களுக்கெல்லாம் மாறனும் அசராமல் பதிலடி கொடுத்தார். இதனிடையே டுவிட்டர் பதிவு ஒன்றில் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றபோது, அங்கு வந்த அஜித் ரசிகர்கள் அவரை அடித்ததாக கூறி இரண்டு புகைப்படங்கள் டுவிட்டரில் வைரலாக பரவி வந்தன.
மாறன் விளக்கம்
இந்நிலையில், அதற்கு விளக்கமளித்து மாறன் பதிவிட்டுள்ளதாவது : “PVR ல என்னடா ஆகும்?, தியேட்டர்னா நாலு பேர் படம் பாக்க வருவாங்க. முடிஞ்சதும் வெளிய போவாங்க. அதை மறைஞ்சி நின்னு ஏன்டா போட்டோ எடுத்த? நேர்ல வந்து எடுத்து தொலைய வேண்டியதுதான? இதை ஷேர் பண்ணுற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ... வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Veetla Vishesham : வீட்ல விசேஷம்... வலிமை வெற்றிக்கு பின் ‘குட் நியூஸ்’ சொன்ன போனி கபூர்
PVR ல என்னடா ஆகும்?
தியேட்டர்னா நாலு பேர் பாக்க வருவாங்க. முடிஞ்சதும் வெளிய போவாங்க. அதை மறைஞ்சி நின்னு ஏன்டா போட்டோ எடுத்த? நேர்ல வந்து எடுத்து தொலைய வேண்டியதுதான?
இதை ஷேர் பண்ணுற அளவுக்கு நான் செலப்ரிட்டி இல்ல. எப்படியோ...வைரல் பப்ளிசிட்டி தந்த அந்த தம்பிக்கு ரொம்ப நன்றி. pic.twitter.com/2D18jWVnsA