
“இருட்டு அறையில் முரட்டு குத்து” திரை விமர்சனம் கசமுசா காமெடி
கன்னி கழியாத பசங்களை எல்லாம் கண்டு புடிச்சி கரெக்ட் பண்ணி கை வச்சி
படம் அடல்ட் படம் அங்க எல்லாம் சொல்லலாம் பட் நம்ம திரைவிமர்சனம் அடல்ட்டுக்கு மட்டும் அல்ல பொது மக்களுக்கும் ஆக இந்த டோசை படம் பார்த்து பில் பண்ணி கோங்க.
நான் இதுவரை இந்த படத்தைப் பார்க்கவில்லை ஆனால் இந்த படத்தைப் பார்த்துவிட்டு வந்த என்னுடைய நண்பன் பார்த்து ரசித்ததை அப்படியே இங்கு சொல்கிறேன். இந்த கதையை கேட்டுவிட்டு நீங்கள் படத்திற்கு செல்லுங்கள் கட்டாயம் செல்லுங்கள். பட் நீங்கள் யாருடன் போகலாம், எப்போ போகலாம் எங்க போகலாம் என்பதை நீங்களே முடிவு பண்ணிகோங்க.
என்னடா படம் நாடு எங்க போகுது சினிமா உலகத்த கெடுக்குது அப்படி இப்படின்னு வியாக்கியானம் பேசும் அதிபுத்திசாலிகளே நீங்கள் தயவு செய்து படத்தை பாரக்காதீர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால் நீங்க பாத்து கிழிச்சது எல்லாம் போதும் இனி நாங்க கிழிச்சத பாருங்க அப்டின்னு சொல்கின்ற மாதிரி இயக்குனர் படத்த எடுத்து கொடுத்து உள்ளார்.
ஆமாம், இது நல்லா படமா கெட்ட படமா, இது நாட்டுக்கு தேவையா இல்லையா இவ்வாறு எல்லாம் மேடை போட்டு பேச வைக்கும் படம். அதே சமையம் அவர்கள் போட்டதை ஐ மீன் போட்ட படத்தை பற்றியும் எதிர்ப்பு மேடையில், முதல் ஆளாக பேசும் ஆளையும் பின் வாசல் வழியாக வந்து பார்க்க தூண்டும் படம். இது மாதிரி படங்கள் சினிமாவுக்கு புதுசு இல்லை தமிழுக்கு புதுசு பட் ரொம்ப மவுசு.
சரி படத்தின் கதைக்குவருவோம் கதாநாயகன் கெளதம் தான் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணுடுன் பழகி பார்பதற்கு தாய்லாந்து செல்கிறார். அவர்களோடு துணைக்கு அவரது நண்பரும் அவரது காதலியும் செல்கின்றனர். போன இடத்தில் ஒரு பேய் அந்த பேய் ஒரு கன்னி கழியாத, பெண் ஆணுடன் சேர்ந்து தன் ஆசை தீர்த்து கொள்ள இருபத்து ஐந்து வருடமாக காத்து கொண்டு இருக்கிறது. அதில் என்ன பிரச்சனை பேய் நல்லாதனா இருக்கு போற போக்கில் ஒரு போடு போட்டு போகவேண்டிதானா என கேட்கும் உங்களுக்கு ஒரு ட்விஸ்ட் என்னவென்றால் பேய்க்கு சோப்பு போட்டால் உங்களுக்கு ஆப்பு தான் தட் மீன்ஸ் மேட்டர் முடிஞ்சா முடிச்சவுங்க சேப்ட்டர் முடிஞ்சு போகிடும் அதான் ட்விஸ்ட்.
ஆக எப்படி அவர்கள் தப்பித்தார்கள் என்பதே படம் மத்தபடி நடிப்பு காமெடி வசனம் எல்லாம் சன்னி லியோன் அக்கா பட ரகம் தான்.
முதலிலேயே குறிப்பிட்டதுபோல, அடல்ட் காமெடியாக ஒரு படம் எடுப்பதில் தவறில்லை. ஆனால், அது எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது, பரிதாபமாக இருக்கிறது. பிறப்புறுப்பில் அடிபடுவதையும் உடலுறவு குறித்த வசனங்களையும் மட்டுமே அடல்ட் காமெடியாகக் காட்டியிருக்கிறார்கள். முக்கியக் கதாபாத்திரமாக வரும் அந்த ஹாட் பேய் வேறலேவல்.
குழந்தைகளை அழைத்துச் செல்லும் பொதுவான படங்களில் வயது வந்தவர்களுக்கான காட்சிகள் இடம்பெறும்போது பெரும் சங்கடத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். இதைக் காட்டிலும், வயது வந்தவர்களுக்கான திரைப்படம் என்று சொல்லிவிட்டுப் பெரியவர்களுக்கான கதை, காட்சிகள், வசனங்கள் ஆகியவற்றை அமைப்பது நேர்மையான செயல். வயது வந்தவர்களுக்கான கதையை எடுக்கத் துணிந்த இயக்குநரை, நடித்த நடிகர்களை பாராட்டலாம். ஆக சந்தோசமா போங்க ஜாலியா வாங்க பட் அனைவரும் கையில் டிசு பேப்பர் கட்டாயம் கொண்டு வருமாறு படக்குழுவின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.