பிக்பாஸ் காயத்ரி,அட்லீயை “இருட்டு அறையில் வைத்து முரட்டுக் குத்து குத்திய” மரண கலாய்...எப்படி தெரியுமா?

 
Published : May 08, 2018, 03:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
பிக்பாஸ் காயத்ரி,அட்லீயை “இருட்டு அறையில் வைத்து முரட்டுக் குத்து குத்திய” மரண கலாய்...எப்படி தெரியுமா?

சுருக்கம்

fun of director Atlee in adult comedy movie IAMK

ஹரஹர மஹா தேவிக்குப்பின் கவுதம் கார்த்திக் & சந்தோஷ் இயக்கத்தில் வெளியான அடல்ட் காமெடி படமான “இருட்டு அறையில் முரட்டுக் குத்து” ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ. 10 கோடி வசூல் அள்ளியதாக தகவல்கள் கசிகின்றன. படத்தை பற்றி என்னதான் பலரும் கழுவிக் கழுவி ஊத்தினாலும் பாக்ஸ் ஆபீஸில் தாருமாராக கலைக்ஷனை அள்ளிக் குவிக்கிறது.

பணம் சம்பாதிக்க இப்படி ஒரு படத்தை எடுக்கலாமா?  இந்த படம் ஓடக் கூடாது என்று திரைத்துறையில் உள்ளவர்கள் போர்க்கொடி தூக்கியும், இளைஞர்கள் மத்தியில் இருக்கும் ஆர்வத்தை பார்த்தாலே தெரிகிறது, அடல்ட் காமெடி படமான ஹரஹர மஹா தேவகி போன்றே இந்த படமும் அதிரிபுதிரி ஹிட் அடிப்பதை யாராலும் தடுக்க முடியாது.

சரி விஷயத்துக்கு வருவோம், இந்த படத்தில் அடல்ட் காமெடி இருந்தாலும், அங்காங்கே பல ரெபரன்ஸ் இருக்கு, என்னன்னா,  படத்தில் உள்ள இந்த பங்களாவில் பேய் இருக்கிறது என்று பொய் சொல்லி அந்த பெண்களுடன் சேர்ந்து ஒரே அறையில் தூங்கலாமா என்று கவுதம் கார்த்திக் பாலாவிடம் கேட்பார். அதற்கு அவரோ “நீங்க சொல்வது எப்படி இருக்கு தெரியுமா வீரா சார், ஊருக்குள்ள எவனோ ஒருத்தன் மௌனராகம், சத்ரியன் படத்திற்கு ராஜா ராணி, தெறின்னு பேரு வச்சானாம்” என இந்த வசனம் வைத்து அட்லீயை தெறிக்கவிட்டிருப்பார்.

அதேபோல, பிக் பாஸ் வீட்டில் நேரம், நாள் கூறுவது போன்றே இந்த படத்திலும் நேரம், நாள் இடம்பெறுகிறது. பிக் பாஸ் மூலம் தமிழக மக்களின் கோபத்துக்கு உள்ளான காயத்ரியையும் கலாய்த்து தள்ளியுள்ளனர். அதாவது, பேயை விரட்ட பங்களாவுக்கு வரும் மொட்டை ராஜேந்திரனும், பாலாவும் தங்கத்தை திருடிவிட்டு எஸ்கேப் ஆக திட்டமிடுவார்கள்.

அவர்கள் தங்கத்தை திருட முயற்சி செய்யும்போது திடீர் என்று திரும்பிப் பார்த்தால் அவர்கள் பின்னால் பேய் நிற்கும். பேயை பார்த்த ராஜேந்திரன் காயத்ரி டா என்பார். அதற்கு பாலாவோ காயத்ரி இதை விட கேவலமாக இருக்கும் என கலாய்த்துள்ளார். மொட்டை ராஜேந்திரனும், பாலாவும் கலாய்த்தது பிக் பாஸ் காயத்ரி தான் என்று படத்தை பார்த்தவர்கள் சிரிக்கிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!