இந்திய டிரம்ஸ் கலைஞரின் வீடியோவை உலகளவில் வைரலாக்கிய ஜஸ்டின் ஃபீபர்.. முடிஞ்சா இந்த வீடியோவை சிரிக்காம பாருங்க

Published : Aug 05, 2022, 01:42 PM IST
இந்திய டிரம்ஸ் கலைஞரின் வீடியோவை உலகளவில் வைரலாக்கிய ஜஸ்டின் ஃபீபர்.. முடிஞ்சா இந்த வீடியோவை சிரிக்காம பாருங்க

சுருக்கம்

Justin Bieber : இந்தியாவைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஒருவர் டிரம்ஸ் வாசிக்கும் வீடியோவை பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் ஃபீபர் உலகளவில் பேமஸ் ஆக்கி உள்ளார்.

வட மாநிலத்தில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் இசைக் கலைஞர் ஒருவர் டிரம்ஸ் வாசித்த வீடியோ ஒன்று கடந்த மாதம் 6-ந் தேதி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவிட்ட ஒரு மாதத்திற்கு பிறகு மிகப்பெரிய அளவில் வைரல ஆகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பிரபல பாப் இசைக் கலைஞர் ஜஸ்டின் ஃபீபர் தான்.

அண்மையில் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்த ஜஸ்டின் ஃபீபர், அதனை தனது ஸ்டோரியில் ஷேர் செய்து, அதில் தனது குழுவைச் சேர்ந்த டிரம்ஸ் கலைஞரின் பெயரைக் குறிப்பிட்டு, அடுத்த இசை நிகழ்ச்சியில் நீயும் இப்படித் தான் வாசிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். அவர் இந்த பதிவை போட்ட பின்னரே இந்த வீடியோ உலகளவில் வைரல் ஆனது.

இதையும் படியுங்கள்... Fighters-யை பெருமையா பேசுனா ஒரே ஆள் விஜய் தான் : சண்டை கலைஞர் கிருஷ்ணா

ஜஸ்டின் ஃபீபரை இந்த வீடியோ கவர்ந்ததற்கு முக்கிய காரணம், அதில் அந்த கலைஞர் டிரம்ஸ் வாசித்த விதம் தான். துள்ளி துள்ளி குதித்தபடி அவர் வாசிக்கும் வீடியோவை முதன்முறையாக யார் பார்த்தாலும் சிரிப்பு தான் வரும். அப்படி தான் ஜஸ்டின் ஃபீபரும் பார்த்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் பதிவிட்ட பின் உலகளவில் படு வைரல் ஆன இந்த வீடியோவை இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த வீடியோவுக்கு இதுவரை 9 லட்சத்திற்கு அதிகமான லைக்குகளும் கிடைத்துள்ளன. அந்த வீடியோவில் இடம்பெற்று இருப்பவரின் பெயர் மற்றும் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்...  கோலிவுட்டில் வாரிசு நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறதா? நடிகை ஆத்மிகாவின் ஆதங்க பதிவால் வெடித்த சர்ச்சை

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்