கமல் இல்லாமல் தொடங்கிறது இந்தியன் 2 ஷூட்டிங்... காரணம் என்ன?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 12, 2021, 02:11 PM IST
கமல் இல்லாமல் தொடங்கிறது இந்தியன் 2 ஷூட்டிங்... காரணம் என்ன?

சுருக்கம்

இதில் காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்டோர் சம்பந்தமான காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளதாம். 

1996ம் ஆண்டு கமல் ஹாசன் அப்பா, மகன் இரட்டை வேடத்தில் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘இந்தியன்’. இதில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, நாசர், கவுண்டமணி, செந்தில், கஸ்தூரி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தது. இந்த கதையின் இறுதியில் இந்தியன் தாத்தா தீ விபத்தில் தப்பித்து, வெளிநாட்டில் இருப்பது போல் காட்டப்படுவதோடு படம் நிறைவடையும். எனவே இந்தியன் 2 படத்தை காண பலரும் காத்திருந்தனர். 

 

இதையும் படிங்க: சூப்பர் ஹிட் சீரியலுக்கு திடீர் தடை போட்ட சன் டி.வி... சைடு கேப்பில் தட்டித்தூக்கிய முன்னணி சேனல்!

​ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக 2017ம் ஆண்டு படம் குறித்த அறிவிப்பு வெளியான போதும், பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கடந்த ஆண்டு தான் ஷூட்டிங் தொடங்கியது.  இதில்  கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.  இந்தியன் 2 படப்பிடிப்பின் போது நடைபெற்ற கிரேன் விபத்து அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனால் படப்பிடிப்பே சில நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. 

இடையில் கொரோனா பிரச்சனை காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமே 7 மாதத்திற்கு முடங்கியது. அதன் பின்னர் படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டால் இந்தியன் 2 போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் தொடங்கப்படாமலேயே இருந்தன. இதனிடையே இந்தியன் 2 பட ஷூட்டிங்கை பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

இதையும் படிங்க:  கிணற்றில் தவறி விழுந்த நமீதா... காப்பாற்ற ஓடிய கிராம மக்கள்... பரபரப்பு போட்டோஸின் பின்னணி என்ன?

இதற்காக பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோரிடம் படக்குழு தேதி கேட்டுள்ளதாம். இதில் காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்டோர் சம்பந்தமான காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளதாம். லோகேஷ் கனகராஜ் உடன் விக்ரம் மற்றும் சட்டமன்ற தேர்தல் பரப்புரை வேலைகளில் தீவிரமாக இருப்பதால் கமல் ஹாசன் இந்த ஷெட்டியூலில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் முடிந்த பிறகு தான் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளை ஒரே மூச்சில் நடித்துக் கொடுக்க கமல் ஒப்புக்கொண்டுள்ளராம். அதனால் இந்த ஷெட்டியூலில் கமல் இல்லாமல் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

காந்தா முதல் பைசன் வரை.... 2025-ம் ஆண்டு IMDb-ல் அதிக ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள்..!
மகளுக்காக நடிகையை ஸ்கெட்ச் போட்டு கடத்திய தயாரிப்பாளர்: திரையுலகில் பரபரப்பு