இந்தியன் 2 கோரவிபத்து..! இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜர்..!

By manimegalai aFirst Published Feb 27, 2020, 11:32 AM IST
Highlights

கடந்த வாரம், 19 ஆம் தேதி இந்தியன் 2  படக்குழுவினர், இரவு படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது, கிரேன் உதவியுடன் லைட்டிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பிரமாண்ட லைட்டின் பளு தாங்காமல் கிரேன் கீழே சரிந்து விழுந்ததில், துணை இயக்குனர் கிருஷ்ணன், ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், ப்ரோடுச்டின் அசிஸ்டென்ட் மது ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்த இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமலஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

மேலும், காயமடைந்த 9 பேர் உட்பட, ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரிடத்திலும் போலீசார் விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும், கூறப்பட்டது.

இந்நிலையில்,  சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில், விசாரணைக்காக இயக்குனர் ஷங்கர் தற்போது ஆஜராகி உள்ளார். இந்த விபத்து நேர்ந்த போது இயக்குனர் ஷங்கர்அந்த இடத்தில் இருந்ததால், இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!