வரும் மார்ச் 23 ம் தேதி இரவு 8 மணியளவில் டிஸ்கவரி சேனலில் காட்டுக்குள் பியர் கிரில்சுடன் ரஜினி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதுகுறித்து டிஸ்கவரி சேனல் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் அறிவித்துள்ளது.
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதன் மூலம், உலகம் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். காடு, மலை, நீர் நிலைகள் போன்ற இடங்களில் மனிதன், மாட்டிக்கொண்டால் கையில் உள்ள உபகரணங்களை வைத்து, தப்பி வருவது எப்படி என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் விளக்கி வருகிறார்.
இதை தொடர்ந்து, பியர் கிரில்ஸ்டன் ஜனவரி மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயணம் மேற்கொண்டார்.ஹைதராபாத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்ட மேன் vs வைல்ட் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்து சில நாட்கள் பிறகு அதன் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.
Gear up to venture into the wilderness of India with survival expert and the ultimate superstar in an action packed adventure. Premieres 23 March at 8 PM, only on Discovery pic.twitter.com/zSS4GsSCL4
— Discovery Channel IN (@DiscoveryIN)
இந்தநிலையில் தற்போது அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . வரும் மார்ச் 23 ம் தேதி இரவு 8 மணியளவில் டிஸ்கவரி சேனலில் காட்டுக்குள் பியர் கிரில்சுடன் ரஜினி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதுகுறித்து டிஸ்கவரி சேனல் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் அறிவித்துள்ளது. இதற்கு முன்பாக பிரதமர் மோடி, பியர் கிரில்ஸ்சுடன் காட்டுக்குள் சென்று அவருடன் பயணித்தது, மிகவும் வைரலாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்..! அதிர்ச்சியில் அறிவாலயம்..!