'மாஸ்டர்' ஆடியோ லாஞ்சுக்கு முன்பே விஜய்யை அலறவிடும் ஐடி! குட்டி ஸ்டோரிக்கு தயாரானவரை குமுறவைக்கும் ரெய்டு!

By manimegalai aFirst Published Mar 12, 2020, 1:33 PM IST
Highlights

தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம், அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது.
 

தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம், அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் படு வேகமாக நடந்து வருகிறது.

மேலும் மார்ச் 15 ஆம் தேதி, 'மாஸ்டர்' படத்தின் இசையை பிரமாண்டமாக வெளியிட தயாராகிவிட்டனர் படக்குழுவினர். எப்போதும் பிரபல தனியார் கல்லூரியில் நடக்கும் தளபதியின் இசை வெளியீட்டு விழா, இந்த முறை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது.


 
எப்போதும் படத்தின் ரிலீஸ் சமயத்தில் தான், தளபதிக்கு பிரச்சனை மேல் பிரச்சனைகள் வருவது வழக்கம். ஆனால் இந்த முறை, ஆடியோ லஞ்ச் சமயத்திலேயே பல பிரச்சனைகள் சுழன்று அடிக்க துவங்கி விட்டது.

ஏற்கனவே, 'பிகில்' பட சம்பளம் தொடர்பாக கடந்த ஓரிரு மதத்திற்கு முன், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக கூறப்பட்டது. நெய்வேலியில் 'மாஸ்டர்' படப்பிடிப்பில் இருந்த விஜய்யை நேரில் சந்தித்து ஐ.டி. அதிகாரிகள் சம்மன் வழங்கினார்.

படப்பிடிப்பில் நடத்திய விசாரணைக்கு பின், அவருடைய காரிலேயே வைத்து விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட விசாரணைக்கு விஜய்யின் சார்பாக அவருடைய ஆடிட்டர் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் பனையூரில் உள்ள விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.  இந்த சோதனை மாலை 5 மணிவரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கொண்டு இந்த விசாரணை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வருமான வரித்துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 'மாஸ்டர்' பட இசை வெளியீட்டு விழா இன்னும் மூன்று தினங்களில் நடைபெற உள்ள நிலையில், இந்த திடீர் ஐடி ரெய்டு நடத்தி விஜய் மற்றும் அவருடைய குடும்பத்தினரையே அதிர்ச்சியாக்கி உள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.

எப்போதும் இசை வெளியீட்டு விழாக்களில், தன்னுடைய குட்டி ஸ்டோரி மூலம், அரசியல் கதைகளையும் அள்ளிவிடும் விஜய், இந்த முறையும் அதே போல் ஏதேனும் கதை சொல்வாரா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும் நிலையில்... ஐடி ரெய்டு நடந்து வருவதால் அவருடைய மனநிலை எப்படி உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

click me!