உடனே ஆனந்த கண்ணீர் என்று சந்தோஷப்பட வேண்டாம். அங்க தான் இருக்கு டுவிஸ்ட்டே.
சீரியலில் நடித்தவர்கள் எல்லாம் சினிமாவில் ஜொலிக்க முடியாது என்ற விதியை முதலில் உடைத்தது அந்த சின்னத்திரை நடிகை தான். கொஞ்சம், கொஞ்சமாக சினிமா பக்கம் ஒதுங்கிய அந்த நடிகைக்கு அக்கட தேசத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்த படமும் ஆகா...ஓஹோ... என ஓடியாது. இதையடுத்து தமிழில் கடவுள் பெயர் கொண்ட படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சின்னத்திரை நடிகையை ஒப்பந்தம் செய்தனர்.
அந்த படமும் ஹிட்டானது, நடிகையின் கேரக்டருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இதனால் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் வருகிறதாம். வயது கொஞ்சம் கூடுதலாக இருந்தாலும், பார்ப்பதற்கு இளமை துடிப்போடு இருப்பதால் அந்த நடிகையை ரசிகர்கள் தமிழில் நம்பர் ஒன் நாயகியாக இருக்கும் நம்பர் நடிகையின் மினியேச்சராக பார்க்கின்றனர்.
இந்த நடிகை நடித்த இன்னொரு தமிழ் திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகளை பார்த்து நடிகை கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டாராம். உடனே ஆனந்த கண்ணீர் என்று சந்தோஷப்பட வேண்டாம். அங்க தான் இருக்கு டுவிஸ்ட்டே. பட வாய்ப்பிற்காக நடிகையின் மேனேஜருக்கு கால் செய்யும் தயாரிப்பாளர்கள், அவரை படுக்கைக்கு அழைக்கிறார்களாம். வாய்ப்பு வேண்டுமென்றால் வர சொல்லு என்று கூறுவது அதிகரித்துவிட்டதாம். அதனால் திரும்ப சீரியலுக்கே போய்விடலாமா என்ற யோசனையில் இருக்கிறாராம் அந்த மினியேச்சர் நாயகி.