சுருதி - அக்ஷராவை ஒரே நேரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பிய நடிகர் கமல்ஹாசன்!!

Published : Oct 03, 2021, 10:06 PM IST
சுருதி - அக்ஷராவை ஒரே நேரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பிய நடிகர் கமல்ஹாசன்!!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்ட்ரோ சூப்பராக இருந்தாலும், அதில் நடக்க இருக்கும் பிரச்சனைகளை தான் பிக்பாஸ் ரசிகர்கள் ரசிப்பார்கள். மாடலிங் துறையில் இருந்து, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள சுருதி மற்றும் அக்ஷரா ரெட்டியை ஒரு சமயத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார் கமல்ஹாசன்.  

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்ட்ரோ சூப்பராக இருந்தாலும், அதில் நடக்க இருக்கும் பிரச்சனைகளை தான் பிக்பாஸ் ரசிகர்கள் ரசிப்பார்கள். இந்நிலயில் மாடலிங் துறையில் இருந்து, பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள சுருதி மற்றும் அக்ஷரா ரெட்டியை ஒரு சமயத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார் கமல்ஹாசன்.

சுருதி, தன்னை பற்றி கூறிய போது... தான் ஒரு நேஷனல் லெவல் கூடை பந்து வீராங்கனை என்பதால், சென்னையில் வந்து இன்ஜினியரிங் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தனக்கு ஒரு நிறுவனம் ஸ்பான்ஸர் செய்து தான் படிக்க வைத்தது. பின்னர் மாடலிங் என்கிற ஒரு துறை இருக்கு என்பதே தெரியாமல் தான் அதன் உள்ளே நுழைத்தேன். பலரும் ஏன் இந்த துறைக்கு வந்தாய்... என கேட்டபோது இதில் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். யாரவது எதையாவது வேண்டாம் என சொன்னால் அதனை செய்ய வேண்டும் என தோன்றியது. தற்போது இந்த துறையிலும் என்னால் சாதிக்க முடிந்ததாக கூறியுள்ளார்.

இவரை தொடர்ந்து அக்ஷரா ரெட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். மிகவும் பொறுமையான பெண்ணாகவே பார்க்கப்படும் அக்ஷரா, கடந்த 2019 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் பட்டம் பெற்றவர். மேலும் பல்வேறு மாடலிங் விளம்பரங்கள், மற்றும் கன்னட படத்திலும் நடித்துள்ளார். கமல்ஹாசனின் மகள்களை போலவே சுருதி - அக்ஷரா என பெயர் கொண்ட இவர்களை, பிக்பாஸ் மேடையில்... கேட் வாக் செய்ய வைத்த கமல், இருவரையும் ஒன்றாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பினார்.

இவர்களுக்கு முன்னதாக பிக்பாஸ் வீட்டின் உள்ளே பல தமிழ் படங்களில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகர் வரும் மற்றும் 'குட்டிஸ் சுட்டீஸ்' செல்லங்களின் ஃபேவரட் காமெடியன் இம்மான் அண்ணாச்சி ஆகியோரும் பிக்பாஸ் வீட்டை அலங்கரித்து அட்ராசிட்டி செய்ய வந்துள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கணவருக்காக கொந்தளித்த சாண்ட்ரா; கதறவிட்ட திவ்யா; பிக்பாஸ் அப்டேட்!
கடும் மன உளைச்சலால் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை... அதிர்ச்சியில் ரசிகர்கள்