இமைக்கா நொடிகள்... டீசர் எப்படி ஒரு பார்வை...

 
Published : May 19, 2017, 01:14 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
இமைக்கா நொடிகள்... டீசர் எப்படி ஒரு பார்வை...

சுருக்கம்

imaika nodigal tesar

லேடி சூப்பர் ஸ்டார் 'நயன்தாரா' கடந்த சில வருடங்களாகவே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் நிலையில், இவர் கடைசியாக நடித்து வெளிவந்த 'டோரா' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.

இந்நிலையில்,  நேற்று முன்தினம் இவர் நடத்த 'இமைக்கா  நொடிகள்'  படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியது, இதை தொடர்ந்து நேற்று மாலை  இந்த திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது.

'பில்லா' படத்திற்கு பின்னர் நயன்தாரா முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் நாயகியாகவே இந்த படத்தில் நடித்துள்ளார். 

மிரட்டல்கள், தொடர் கொலைகள், துப்பாக்கி வெடிச்சத்தம், ஆக்ரோஷமான முக பாவனை என இந்த படத்தில் கலக்கியுள்ளார். ஆகவே சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லருக்கு இந்த படத்தில் சற்றும்  குறைவில்லை என்பது தெரியவருகிறது.

இந்த டீசரை பார்க்கும்போது அதர்வா இந்த படத்தின் நெகட்டிவ் ரோலி நடித்திருக்கலாம் என்ற யூகம் ஏற்பட்ட போதிலும் படம் வெளிவந்த பின்னர்தான் இதுகுறித்து உறுதியாக கூறமுடியும்.

அஜய்ஞானமுத்துவின் ஆக்சன் காட்சிகள், ராஜசேகரின் கேமிரா, ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை, புவன் ஸ்ரீனிவாசனின் கச்சிதமான எடிட்டிங் என அனைத்தும் சிறப்பாக இந்த டீசரில் அமைந்துள்ளதால், இந்த படம் நயன்தாராவின் இன்னொரு வெற்றி படமாக அமையும் என்றே கருதப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்