
மோகன்லால் நடிப்பில் பெரும் வெற்றியடைந்த ‘புலிமுருகன்’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க சல்மான்கான் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சல்மானிடம், மலையாள திரைப்படங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விகளுக்கு பதிலளித்த சல்மான் கான், “ஏற்கனவே தான் பாடிகார்டு, கியூங்கி போன்ற மலையாள படங்களின் ரீமேக்கில் நடித்திருக்கிறேன் என்றும், சமீபத்தில் புலி முருகன் படத்தை பார்த்து அந்த படத்தின் ரீமேக் குறித்து பேச இயக்குநர் சித்திக்கிடம் பேச முயற்சிப்பதாகவும், ஆனால் அவரை தற்போது வரை தொடர்பு கொள்ள முடியவில்லை” எனவும் சல்மான்கான் தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமாவின் வெற்றிப்படங்களின் ரீமேக்குகளில் நடித்து வரும் சல்மான்கான், தென்னிந்திய படங்களை அடிக்கடி பார்த்தும் வருகிறார்.
இந்த நிலையில் புலி முருகன் படம் குறித்து சல்மான்கான் பேசியிருப்பதால், அவர் கூடிய விரைவில் புலி முருகன் ரீமேக்கில் நடிக்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.