வெளிநாடு வாழ் தமிழர்களை மகிழ்விக்க இளையராஜா எடுத்துள்ள சூப்பர் முடிவு...என்ன விஷயம் தெரியுமா?

Published : Sep 20, 2022, 03:08 PM IST
வெளிநாடு வாழ் தமிழர்களை மகிழ்விக்க இளையராஜா எடுத்துள்ள சூப்பர் முடிவு...என்ன விஷயம் தெரியுமா?

சுருக்கம்

தற்போது இசைஞானி இளையராஜா தனது ட்வீட்டில், நியூசிலாந்து விமானத்துடன் ஒரு போட்டோவையும், வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

இசைஞானி இளையராஜா உலகம் முழுவதும் தனது இசைக்கச்சேரியை நடத்தி வருகிறார். முன்னதாக இவர் சென்னையில் பிரமாண்டமாக நடத்தி இருந்த இசைக் கச்சேரி விழாவிற்கு தனுஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வருகை தந்திருந்தனர்.  70 வதுகள் தொடங்கி இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த இளையராஜாவின் இசைக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தாலாட்டு முதல் துக்க நிகழ்வு வரை அனைத்திற்கும் இளையராஜா பாட்டு தான். இசையால் இவரது புகழ் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பரவிக் கிடைக்கிறது. 

அங்குள்ள தமிழர்களை மகிழ்விக்கும் விதமாக அவ்வப்போது இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார் இளையராஜா. அந்த வகையில் தற்போது நியூசிலாந்து நாட்டில் இசை கச்சேரியை நடத்த முடிவு செய்துள்ளார் இளையராஜா. இவர் இசையில் ஹிட் அடித்த பாடல்கள் இசை கச்சேரியின் மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு சென்றடைவது வழக்கம். அந்த வகைகள் தற்போது இசைஞானி இளையராஜா தனது ட்வீட்டில், நியூசிலாந்து விமானத்துடன் ஒரு போட்டோவையும், வீடியோவையும் பகிர்ந்துள்ளார். அதில் நியூசிலாந்து மியூசிக் கான்செர்ட்க்கு தயாரா என்று கேள்வி கேட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...1000 கோடி கொடுத்தாலும் இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன்” : அதிரடி காட்டும் ராமராஜன்

இதுபோன்று இளையராஜா வரும் அக்டோபர் 15ஆம் தேதி துபாயிலும் இசை கச்சேரி நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதிவை பார்த்த நியூசிலாந்து வாழ் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவரின் பதிவிற்கு மேஸ்ட்ரோ வெயிட்டிங் வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகளுக்கு...கவர்ச்சி பொங்கும் கண்களால் கைது செய்யும் சீதா ராமம் நாயகி..மிருணாள் தாகூரின் ஹாட் க்ளிக்ஸ்

இளையராஜா போன்றே அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் பல நாடுகளில் இசைக்கச்சேரி நடத்து வருகிறார். அவ்வாறு சமீபத்தில் இவர் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரபல நிகழ்ச்சி ஒன்றை நடத்தி அசத்தி இருந்தார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு