100 கோடி கொடுத்தாலும் இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன்” : அதிரடி காட்டும் ராமராஜன்

Published : Sep 20, 2022, 02:38 PM ISTUpdated : Sep 20, 2022, 06:50 PM IST
100 கோடி கொடுத்தாலும் இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டேன்” : அதிரடி காட்டும் ராமராஜன்

சுருக்கம்

ஆயிரம் கோடி கொடுத்தாலும் தாறுமாறான கதைகளில் நடிக்கும் அளவிற்கு தரம் கெட்ட வர்க்கத்தில் பிறக்கவில்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழி வந்தவன் என ராமராஜன் பேசியுள்ளார்.

நம்ம ஊரு நல்ல ஊரு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராமராஜன். 90களில் ரசிகர்கள் மனதில் நின்ற கிராமத்து நாயகனாக தனது அங்கீகாரத்தை பதித்திருந்தார். இவரது பாணியை திரையுலகில்  பிரதிபலிப்பதற்காகவே வண்ண வண்ண உடைகள் அணிந்து மாஸ் காட்டி இருப்பார் ராமராஜன். இன்றளவும் கூட பளிச்சிடும் கலர்களுக்கு ராமராஜன் கலர் என்று பெயர் உண்டு. அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் ஊறிப்போன இவர் இறுதியாக 2012 ஆம் ஆண்டு மேதை படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து கிராமத்து நாயகன்கள் கதாபாத்திரத்தை எடுத்து நடித்த இவர் எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், எங்க ஊரு காவல்காரன் என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து மிகுந்த பாராட்டுகளை பெற்றிருந்தார்.

அதோடு 1996 ஆம் ஆண்டு அம்மன் கோயில் வாசலிலே படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தொடர்ந்து நம்ம ஊரு ராசா, கோபுர தீபம், விவசாயி மகன், சீறிவரும் காளை உள்ளிட்ட படங்களை இயக்கி மாஸ் காட்டி இருந்தார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர் அவரின் பாணியை அதிகமாகவே  பிரதிபலித்திருப்பார். தற்போது பத்து ஆண்டு இடைவெளிக்கு பிறகு சாமானியன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார். 

மேலும் செய்திகளுக்கு...கவர்ச்சி பொங்கும் கண்களால் கைது செய்யும் சீதா ராமம் நாயகி..மிருணாள் தாகூரின் ஹாட் க்ளிக்ஸ்

அரசியல் சொந்த வாழ்க்கை காரணமாக சினிமா துறையில் இருந்து ஒதுங்கி இருந்த இவரை சமணியன் படத்தில் காண்பதற்காக ரசிகர்கள் ஆவலில் காத்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா திரைப்படமாக இந்த படம் உருவாகிறது. மதியழகன் தயாரிக்க ஆர் ராகேஷ் என்பவர் இயக்கி உள்ளார். ராமராஜனின் 45 வது படமான இந்த படத்தின் முதல் பார்வை நேற்று வெளியானது. இதில் ராதாரவி எம்.எஸ். பாஸ்கர் முக்கிய ரோலில் நடிக்க உள்ளது அந்த போஸ்டரின் மூலம் தெரிய வந்தது. 

மேலும் செய்திகளுக்கு... ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் போல்ட் போஸ் கொடுத்த சமந்தா...கண்களை கலங்கடிக்கும் புகைப்படங்கள்

இந்நிலையில் இன்று சாமானியன் பட டீசர் வெளியீட்டு விழா நடைபெற்று உள்ளது. அந்த விழாவில் ராமராஜன் பேசியிருந்த கருத்து தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது. விழாவில் பேசிய ராமராஜன் இதுவரை எத்தனையோ கதைகளை கேட்டு விட்டேன். ஆனால் எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. 100 கோடி கொடுத்தாலும் தாறுமாறான கதைகளில் நடிக்கும் அளவிற்கு தரம் கெட்ட வர்க்கத்தில் பிறக்கவில்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழி வந்தவன். இதுவரை 45 படங்களில் நடித்துள்ளேன். 50 படங்கள் வரை ஹீரோவாக நடிப்பேன். சினிமா வரலாற்றில் 50 படங்களில் ஹீரோவாக மட்டுமே யாரும் நடித்ததில்லை எனக் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!
டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?