IlaiyaRaja சோகத்தில் முடிந்த இசை ஞானியின் காதல் ; தற்போது உலா வரும் இளையராஜாவின் காலம் கடந்த காதல் கீதம்

Published : Nov 30, 2021, 11:04 AM IST
IlaiyaRaja சோகத்தில் முடிந்த இசை ஞானியின் காதல் ; தற்போது உலா வரும் இளையராஜாவின் காலம் கடந்த காதல் கீதம்

சுருக்கம்

IlayaRaja கடந்த 1970ஆம் ஆண்டு தனது துறையை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை இளையராஜா ஒருதலையாக காதலித்துள்ளார்.

இன்றும் இனிமையான காதல் பாடல் என்றாலே இளையராஜாதான். தாலாட்டிலிருந்து துக்கம் வரை எதுவானாலும்  இளைய ராஜா பாடல்கள் தான். 80ஸ்,90ஸ், 20ஸ் என வருடங்கள் உருண்டோடினாலும் இசையின் ரசம் என்றும் குறைவதில்லை. அவரின் இசையில் இதுவரை உறையாத மனிதர் இருக்க வாய்ப்பே இல்லை. இன்றைய தலைமுறை கூட ரசிக்கும் இன்னிசையை தந்தவர் பண்ணைபுரத்து ஆர்மோனி. ஞானதேசிகன் என்னும் பெயருடன் சென்னைக்கு வந்த கிராமத்து கீதம் இன்று இசை ஞானியாக உயர்ந்துள்ள கதை ஊரறிந்ததே. 

7ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை தன சொந்த இசையில் கொடுத்த இசைஞானி,  பத்ம பூஷன், பத்ம விபூஷன் என உயரிய பல விருதுகளையும் தட்டி சென்றுள்ளார். கண்டங்கள் கடந்து பரவிய இசைஞானியின் வாழ்க்கை சம்பவம் ஓன்று  வைரலாகி வருகிறது.

காதல் பாடல்களின் நாயகனான இளையராஜாவின் காதல் கதை தான் அது. இளையராஜாவின் இளைமை பருவத்தில் மலர்ந்த காதல் கதை சோகத்தில் முடிந்துள்ளது.

இளையராவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி என 3 வாரிசுகள் உள்ளனர்.  அவரின் மனைவி  ஜீவா கடந்த 2011 ஆம் ஆண்டு இறந்து விட்டார். 

இந்நிலையில் இளைய ராஜாவின் சோக காதல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  1970ஆம் ஆண்டு தனது துறையை சேர்ந்த வீணா காயத்ரி என்ற பெண்ணை இளையராஜா காதலித்துள்ளார். பல வருடங்களாக ஒரு தலை காதலை செய்து வந்த இளையராஜா காயத்ரியை கவர பல கட்ட மேஜிக்குகளை கையாண்டுள்ளார். ஆனால் எதுவுமே வேலைக்காகவில்லை. 

இதைத்தொடர்ந்து  அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா  வீணை வாசிப்பதிலும் கைதேர்ந்த காயத்ரியை  vice-chancellor ஆப் தமிழ் நாடு மியூசிக் என்ற பொறுப்பை  கொடுத்துள்ளார். வருடங்கள் கடந்தும் மனம் மாறாத காயத்ரி கப்பலில் வேலை செய்து வந்த உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் கப்பலிலேயே பல  ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இவ்வாறு இசைஞானியின் காலம் கடந்த காதல் கீதம் தற்போது சமூக ஊடகங்களில் உலா வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கள்ளாகட்டிய டாப் 3 படங்கள் பட்டியல்: லேட்டஸ்ட் கோலிவுட் அப்டேட்!
2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?